ETV Bharat / bharat

கேரளாவின் கனவுத்திட்டம் கோழிக்கோட்டில் தொடக்கம்

கேரள அரசின் ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் திட்டம் முதல்கட்டமாக கோழிக்கோட்டில் தொடங்குகிறது.

kerala-fibre-optic-network-in-kozhikode
kerala-fibre-optic-network-in-kozhikode
author img

By

Published : Apr 28, 2022, 9:41 AM IST

திருவனந்தபுரம்: கேரளாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 20 லட்சம் குடும்பங்கள் உள்பட 30,000 அரசு அலுலகங்கள், பள்ளிகளுக்கு மாநில அரசு சார்பில் இலவச அதிவேக இன்டெர்நெட் வசதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் திட்டத்திற்காக ரூ.1,548 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இந்தத் திட்டப் பணிகள் 2020ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா காரணமாக நீண்டுள்ளது. இந்த நிலையில், நேற்று(ஏப். 27) இந்த திட்டம் முதல்கட்டமாக கோழிக்கோட்டில் செயல்படுத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள மாநில அரசு, "கே-ஃபோன் (கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்) திட்டம் முதல் கட்டமாக கோழிக்கோட்டில் நடைமுறைக்குவருகிறது. அந்த வகையில், கோழிக்கோட்டின் செவாயூர், கினாலூர், கொடுவள்ளி, சக்கித்தப்பாரா, கோயிலாண்டி மற்றும் மேப்பையூர் கிராமங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு மொத்தமாக 2060 இணைப்புகள் வழங்கப்படுள்ளன. மே அல்லது ஜூன் மாதங்களில் சேவைகள் தொடப்படும்" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: “வெறுப்பு அரசியலை கைவிடுங்கள்”- பிரதமருக்கு முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.