எர்ணாகுளம் (கேரளா): தனியார் கனிம நிறுவனம் மற்றும் கேரள முதலமைச்சர் மகளின் ஐடி நிறுவனத்திற்கும் இடையே நடந்த சட்டவிரோத நிதி பரிவர்த்தனை தொடர்பாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மகள் மற்றும் சில அரசியல் தலைவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சிறப்பு லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, என்.வி.ராஜீ, வழக்கி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள போதுமான ஆதாரம் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சமூக ஆர்வலர் கிரீஷ்பாபு மூவாற்றுப்புழை சிறப்பு லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமனறத்தில் மனுவை தாக்கல் செய்து இருந்தார்.
அதில், "சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்று உள்ளது. கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூட்டில் லிமிடெட் மூலம் சட்ட விரோத பண பரிவர்த்தனையில் பலர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கேரளா முதலமைச்சர் விஜயன், அவரது மகள் வீணா, மாநில சட்டசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதலா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களான பி.கே.குஞ்சாலிக்குட்டி, வி.கே.இப்ராகிம்குஞ்சு, வீணாவின் ஐ.டி நிறுவனம் மற்றும் கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூட்டில் லிமிடெட் ஆகியோர் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
கேரளாவில் 2017 முதல் 2020ஆம் ஆண்டு வரையில் முதலமைச்சர் மகளுக்கு கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூட்டில் லிமிடெட் நிறுவனம் மொத்தம் ரூ.1.72 கோடி செலுத்தியதாக மலையாள நாளிதழ் ஒன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது" என மனுவில் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் வழங்கிய நிலத்திற்கு பட்டா தர கோரிக்கை..40 ஆண்டுகளாக ஒலிக்கும் நரிக்குறவர் மக்கள் வேதனைக்குரல்
இந்த வழக்கு மூவாற்றுப்புழை சிறப்பு லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமனற நீதிபதி, என்.வி.ராஜீ முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பொதுவான குற்றச்சாட்டுகளை தவிர குற்றங்களை நிருபிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூட்டில் லிமிடெட் நிறுவனம் மீது போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் "லஞ்ச ஒழிப்பு துறை புகார் மீது தேவையான ஆதாரங்கள் இணைக்கப்படவில்லை என்றனர். மேலும், ஊழல் தடுப்புச் சட்டம், 1988 இன் கீழ் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் இது மனு நிராகரிக்கப்படுகிறது என உத்தரவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரயிலில் நெய் கொண்டு செல்ல தடையா? - என்னென்ன பொருட்களை ரயில் பயணத்தில் கொண்டு செல்லலாம்?