ETV Bharat / bharat

நிபா வைரஸ் உருவான இடத்தை தேடும் பணியில் சுகாதாரத் துறை - கேரளா நிபா வைரஸ்

நிபா வைரஸ் பாதிப்பால் இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களையும், வைரஸ் முதன்முதலாக எங்கு தோன்றியது என்பதைக் கண்டறியும் பணியிலும் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அலுவலர்களுக்கு உதவும் என சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ்
நிபா வைரஸ்
author img

By

Published : Sep 6, 2021, 1:10 PM IST

திருவனந்தபுரம்: கேரளாவில் கரோனா தொற்று பரவல் குறையாத நிலையில், நிபா வைரஸ் பாதிப்பு பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 2018இல், தென்னிந்தியாவில் முதன்முதலாக கோழிக்கோட்டில்தான், நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

தற்போது, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதே மாவட்டத்தில் 12 வயது சிறுவன், நிபா வைரஸ் தொற்றின் பாதிப்பு காரணமாக செப்டம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தான்.

மீண்டும் நிபா

இதையடுத்து, சிறுவனுடன் தொடர்பிலிருந்த நபர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அச்சிறுவனுடன் அதிக தொடர்பில் இருந்த 20 பேர்களில், இரண்டு பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி தென்பட்டதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை அம்மாநில சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

தொடர்பிலிருந்தவர்களை கண்டறியும் பணி தீவிரம்

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், " நிபா வைரசால் உயிரிழந்த சிறுவன், அதிகப்படியான நபர்களுடன் தொடர்பிலிருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

அச்சிறுவனுடன் அதிக தொடர்பில் இருந்த 20 பேர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது

வைரஸ் தோன்றிய இடத்தை கண்டறிவது முக்கியம்

இதுதொடர்பாக சுகாதார பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களையும், வைரஸ் எங்கிருந்து பரவ தொடங்கியது என்பதையும் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். இறந்த சிறுவன் தான், முதன்முதலாக நிபா வைரசாஸ் பாதிக்கப்பட்டானா என்பதைக் கண்டறிய வேண்டும்.

இதுவரை 188 பேர் அச்சிறுவனுடன் தொடர்பிலிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் பலர் இருக்கலாம். அவர்களைக் கண்டறியும் பணிகள் நடைபெறுகிறது என்றார்.

வவ்வால்கள் மாதிரிகள் சேகரிப்பா?

கிடைத்த தகவலின்படி, கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் சிறுவன் வசித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். சிறுவனின் குடும்பத்தினர் மாதிரிகளையும், வளர்க்கப்படும் பிராணிகளின் மாதிரிகளையும் சேகரிக்க முடிவு செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி , அப்பகுதியில் வவ்வால்களின் கழிவுகள், சிறுநீர் மற்றும் சுரப்புகளைச் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டுமா என்பதையும் அலுவலர்கள் முடிவு செய்வார்கள்" என தெரிகிறது.

இதையும் படிங்க: 10 நாள்களில் 25% - உ.பியில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.