ETV Bharat / bharat

நாளை சந்திப்போம்- அரவிந்த் கெஜ்ரிவால்! - இலவச மின்சாரம்

பஞ்சாப் மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ள டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், “நாளை சந்திப்போம்” எனவும் கூறியுள்ளார்.

Kejriwal
Kejriwal
author img

By

Published : Jun 28, 2021, 3:52 PM IST

டெல்லி: பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பஞ்சாப் மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் திங்கள்கிழமை (ஜூன் 28) வாக்குறுதி ஒன்றை அளித்தார்.

ட்விட்டரில் அவர் அளித்துள்ள அந்த வாக்குறுதியில், “பஞ்சாப் மாநிலத்தில் பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பஞ்சாப் பெண்கள் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் டெல்லியில் நிலைமை அப்படி இல்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குகிறோம். இதனால் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆகையால் பஞ்சாப்பில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இலவச மின்சாரம் வழங்குவோம். நாளை சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் பஞ்சாப் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சராக கேப்டன் அமரீந்தர் சிங் உள்ளார். இந்நிலையில் அங்கு உள்கட்சி பிரச்சினை தலைவிரித்தாடுகிறது.

பாஜக- சிரோமணி அகாலிதளம் கட்சிகள் இடையேயும் முரண்பாடு நிலவிவருகிறது. இதனால், அங்கு ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி தலைவர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க : கரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.