சித்தோகர்: ராஜஸ்தான் மாநிலம் மேவார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இன்று(அக்.8) அதிகாலையில் விடுதியின் பால்கனியின் நின்று கொண்டிருந்த மாணவி, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவி காஷ்மீரின் வாணிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்து மாணவரை ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கூறச் சொல்லி துப்பாக்கி முனையில் மிரட்டல்