சென்ற நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வரும் 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபர், துணை அதிபராக பதவியேற்க உள்ளனர்.
இந்நிலையில் புதிய அரசாங்கத்தில் பல மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ள ஜோ பைடன், பல்வேறு துறைகளுக்கும் புதிய அலுவலர்களை தேர்வு செய்துவருகிறார்.
அந்தவகையில், அமெரிக்காவின் உற்பத்தி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டு போட்டிகளை கவனித்துக் கொள்ள இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஃபசிலியை, ஜோ பைடன் நியமித்துள்ளார். காஷ்மீர் வம்சாவளியைச் சேர்ந்த ஃபசிலியின் பெற்றோர்கள் தங்களது வேலை காரணமாக அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர்கள்.
அமெரிக்காவின் யேல் சட்டப் பள்ளியில் பட்டம் பெற்ற இவர் ஹார்வர்ட் கல்லூரியில் இளங்கலை முடித்து, அதே யேல் சட்டப் பள்ளியில் விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், அட்லாண்டாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் சமூகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டு இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
முன்னதாக அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் டிஜிட்டல் குழுவில் காஷ்மீரை பூர்விகமாக கொண்ட ஆயிஷா என்ற பெண் இடம்பிடித்து குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...இந்தியப் பயனர்களுக்கென பிரத்யேக அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் ப்ளான்!