ஜம்மு-காஷ்மீர் குல்மார்க்கில், வாய்பேச முடியாத, செவித்திறன் இழந்தவர்களுக்காக கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி பனிச்சறுக்கு பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது. ஸ்ரீநகர் மாவட்டத்தைச் சேர்ந்த டிபார்ட்மெண்ட் ஆஃப் யூத் சர்வீஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் நடத்தும் இந்த பயிற்சி முகாம், வரும் பிப்ரவரி 25ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. இந்த பயிற்சி முகாமின் நோக்கம் இளம்தலைமுறையினரை ஊக்குவிப்பதாகும்.
இதில், ஸ்ரீநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்ட 12 பேருக்கு, சைகை மொழியில் பனிச்சறுக்கு செய்வதன் படிநிலைகள் எளிமையாகப் பயிற்றுவிக்கப்படுகின்றது.
மற்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்களை விட இந்த மாற்றுத்திறனாளிகள் விரைவாக கற்றுக் கொள்கிறார்கள் என அங்கிருந்த பயிற்சியாளர் ஒருவர் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க:கடும் பனிப்பொழிவில் உற்சாகமாக பனிச்சறுக்கு விளையாடும் சிறுவர்கள்