ETV Bharat / bharat

மறைந்த தந்தையின் ஆசையை நிறைவேற்ற பைக் சாகசம்.. இளம்பெண் ஜான்வி அசத்தல்! - பெங்களூர்

மறைந்த தந்தையின் ஆசையை நிறைவேற்ற தன்னந்தனியாக 100 சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனத்தில் இளம்பெண் ஒருவர் தமிழகத்தை 14 நாட்களில் சுற்றி வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 7, 2023, 5:30 PM IST

பெங்களூரு: பெங்களூரு நகரில் கடந்த 5 வருடங்களாக பெண்களுக்கு இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி அளித்தும் இருசக்கர வாகனத்தில் நெடுந்தூர பயணம் மேற்கொள்வதற்கான பயண திட்ட ஏற்பாடுகள் செய்து கொடுத்தும் வருமானம் ஈட்டி வருபவர் 26 வயதான இளம் பெண் ஜான்வி.

இவரது தந்தை ராஜேந்திரன் 30 வருடங்களுக்கு முன்பு தனது பூர்விகமான சென்னையை துறந்து பெங்களூருவில் குடியேறி தங்க நகை செய்யும் தொழில் நடத்தி வந்தார். இவரது மகள் ஜான்வி சிறு வயது முதல் இருசக்கர வாகனத்தில் பயணங்கள் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

பெங்களூருவில் பட்டப்படிப்பு முடித்த பிறகு ஜான்வி பல இடங்களில் வேலை செய்தும் திருப்தி ஏற்படாத நிலையில் தனக்கு மிகவும் பிடித்த இருசக்கர வாகனத்தை மையமாக கொண்டு பெண்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து வருமானம் ஈட்டி வந்துள்ளார்.

அது மட்டுமின்றி, பெங்களூரு நகரில் குறிப்பாக வார இறுதிகளில் மென் பொறியாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளை கொண்டு பல்வேறு இடங்களுக்கு தூர பயணம் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தும் வருமானம் ஈட்டிவந்துள்ளார்.

இதனை கண்ட ஜான்வியின் தந்தை ராஜேந்திரன், வாகனத்தின் மீது அலாதியான பற்று கொண்டிருக்கும் தன் மகள், இருசக்கர வாகனத்தில் நெடு தூர பயணங்கள் மேற்கொள்ள முழு சுதந்திரமும் கொடுத்துள்ளார். அது மட்டுமின்றி, மகளுடன் இணைந்து இரு சக்கர வாகனத்தில் தமிழகம் முழுவதும் குறிப்பாக பல்வேறு கோயில்களுக்கு சென்று வர வேண்டும் என அவ்வப்போது கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்துள்ளார். அதன் பிறகு தனது தந்தையின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ஜான்வி 15 நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களை இருசக்கர வாகனத்தில் சுற்றிவர திட்டமிட்டு அதன்படி கடந்த 15 நாட்களில் 38 மாவட்டங்களை சுமார் 3500 கிலோ மீட்டர் பயணித்து நிறைவு செய்துள்ளார்.

இந்த பயணத்தின் போது தனது தந்தைக்குப் பிடித்த அனைத்து முக்கிய திருத்தலங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி, தனது தந்தைக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். தன்னந்தனியாக வெறும் 20 ஆயிரம் ரூபாய் செலவில் 14 நாட்களில் அதுவும் குறைந்த திறன் கொண்ட சிடி 100 வாகனத்தில் தமிழகத்தை இளம் பெண் சுற்றி வந்துள்ளது அனைவரது மத்தியிலும் பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சாதனையை அடுத்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த 10 பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் இருசக்கர வாகனத்தில் 45 நாட்களில் சுற்றிவர ஏற்பாடு செய்துள்ளது.

அந்த பத்து பெண்களில் ஜான்வி ஒரு நபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் சுற்றி வருவதற்கு ஏதுவான இருசக்கர வாகனம் தன்னிடம் இல்லை எனவும் இதனால் தனது நண்பர்களிடம் இதற்கான இருசக்கர வாகனத்தை கொடுத்து உதவுமாறு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் கூறினார். ஆனால் இதுவரை அவருக்கு எந்த உதவியும் கிடைக்காத நிலையில் உள்ளதாகவும் ஜான்வி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Swara Bhasker: நடிகை ஸ்வரா பாஸ்கர் சொன்ன குட் நியூஸ்.. இணையத்தில் குவியும் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.