கொப்பல்: கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள மியாபூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில், அப்பகுதியைச் சே்ரந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த தம்பதியினர் சாமி தரிசனம் செய்யவந்துள்ளனர். அப்போது, அவர்களது இரண்டு வயது மகன் கோயிலுக்குள் நுழைந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆதிக்க சாதியினர், கோயிலுக்கு தீட்டு ஏற்பட்டுவிட்டதாகவும், தீட்டைக்கழிக்க பூஜை செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும், அக்குழந்தையின் பெற்றோருக்கு 25ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.
இதற்கு பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, சாதிய தீண்டாமையை கடைபிடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தின.
கொப்பல் மாவட்ட காவல்துறை இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
25,000 ஆயிரம் அபராதம் விதித்தை கண்டித்ததோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆதிக்க சாதியினரை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: கேரளாவில் முடி வெட்டுவதில் தீண்டாமை; அரசு சார்பில் சலூன் கடை திறப்பு!