பெலகவி: பட்டம் விட மாஞ்சா கயிறு தயாரிப்பதும் , அவற்றை விற்பனை செய்வதும் குற்றம் என்று அவற்றை அரசு தடை செய்துள்ளது. இருப்பினும் சிலர் மாஞ்சா கயிற்றை தயாரித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் ஏற்பட்டுவருகிறது. ஆர்யா மற்றும் திர்ஷா நடித்த ’சர்வம்’ திரைப்படத்தில் சைக்கிளை ஓட்டிச் செல்லும் போது மாஞ்சா கயிறு கழுத்தில் சிக்கி திரிஷா உயிழக்கும் நிகழ்வைப்போல் கர்நாடகாவிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடகாவின் பெலகவி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஹுக்கேரி தாலுகாவிற்கு உட்பட்ட அனந்த்பூர் கிராமத்தில் வசிக்கும் தந்தையும், 5 வயது மகனும் பெலகாவி நகரத்திலிருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர். அப்போது காந்திநகர் தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக 'மாஞ்சா கயிறு' சிறுவனின் கழுத்தில் சிக்கியது. இதனால் சிறுவன் கழுத்து அறுப்பட்ட சம்ப இடத்திலேயே உயிரிழந்தான். அந்த கயிறை பயன்படுத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: சேலத்தில் கந்துவட்டி கொடுமையால் வெள்ளிப்பட்டறை தொழிலாளி தற்கொலை