பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப்-காவி துண்டு அணிவது தொடர்பாக 19 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் முன்பு போராட்டம் நடந்துவருகிறது. இதன்காரணமாக, தலைநகர் பெங்களூருவில் ஹிஜாப்-காவி துண்டு தொடர்பான போராட்டங்களை தவிர்க்க, பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை சுற்றி 200 மீட்டருக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த், பெங்களூரு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களின் வாயில்களில் யாரும் போராட்டம் நடத்தக்கூடாது.
கல்விநிறுவனங்களின் 200 மீட்டர் சுற்றளவுக்கு வரும் பிப்.22ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்படுகிறது. முன்னதாக மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் கல்வி நிறுவனங்கள் முன் மாணவர்கள் அதிகளவில் கூடினாலே, ஹிஜாப் அல்லது காவி துண்டு அணிந்து கோஷமிட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி கல்வி நிறுவனங்களை சுற்றி பாதுகாப்பிற்காக காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பெங்களூருவில் ஓய்வுபெற்ற தமிழ் விமானி, அவரது மனைவி ஆகிய இருவர் சுத்தியலால் தாக்கப்பட்டு கொலை!