ETV Bharat / bharat

ராணுவ செவிலியர் பணியில் பெண்களுக்கான 100% இடஒதுக்கீடு ரத்து - கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

Karnataka High Court: இராணுவ நர்சிங் சர்வீசஸ் ஆணைச் சட்டம் 1943-இன் கீழ் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 100 சதவீத இடஒதுக்கீட்டை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்றம்
கர்நாடக உயர்நீதிமன்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 12:23 PM IST

பெங்களூரு: இராணுவ செவிலியர் பணியில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 100 சதவீத இடஒதுக்கீட்டை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடகா செவிலியர் சங்கம் மற்றும் ஹூப்ளியில் உள்ள செவிலியர் இன்ஸ்டிடியூட்டின் முதல்வர் மற்றும் விரிவுரையாளர் சஞ்சய் எம் பீராயூர் ஆகியோர், கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில், இராணுவ நர்சிங் சர்வீசஸ் ஆணை சட்டம் 1943-இன் கீழ் பெண்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்றும், இராணுவ நர்சிங் சர்வீசஸ் ஆணைச் சட்டம் 1943-இல் 6வது பிரிவில் உள்ள ‘பெண் என்றால்’ என்ற வார்த்தையை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற தார்வாட் கிளையில், நீதிபதி அனந்த் ராமநாத் ஹெக்டே அமர்வு முன் வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “அரசியல் சாசனத்தின்படி, பெண்களை தனி வகுப்பு என்று கூறுவது நியாயமானதுதான். ஆனால், நியாயமற்ற முறையில் பெண்களுக்கு மட்டும் 100 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கக் கூடாது. இதனால் ஆண்கள் இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கப்படுவர்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 1943-இல் ஆங்கிலேயர்கள் அவசரச் சட்டத்தை இயற்றினர். இதனை ஏற்று குடியரசுத் தலைவர், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒப்புதல் அளித்துள்ளார். ஆகவே, இந்த சட்டத்தை அரசியலமைப்புச் சட்டம் 33வது பிரிவின் படி, நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமாக கருத முடியாது. சுதந்திரத்திற்கு முன் பெண்கள் இராணுவத்தில் சேர தயக்கம் காட்டினார்கள். ஆகவே, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 100 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. 1943-இல் இருந்த நிலை, தற்போது இல்லை.

இந்த அரசாணை அமலுக்கு வந்து 80 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில், இந்த இடஒதுக்கீடு வழங்குவதற்கு சரியான காரணங்கள் கூறப்படவில்லை. ஆகவே, இந்த இடஒதுக்கீடு நியாயமற்றது. இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வசதிகளை வழங்குவதே தவிர, வசதிகளை பறிப்பது அல்ல. இராணுவ செவிலியர் பணியில் காரணமின்றி பெண்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால், இடஒதுக்கீடு என்பது அர்த்தமே இல்லாமல் போய்விடும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன்! ஆனாலும் ஆந்திர உயர்நீதிமன்றம் கண்டீசன்? என்ன தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.