அரசுப் பணிகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒரு விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து அரசு தேர்வாணையம் பிறப்பிக்கும் அறிவிப்பாணையில் ஆண், பெண் ஆகிய பிரிவுகளுடன் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனிப்பிரிவு உருவாக்கப்படுகிறது.
கர்நாடகா பொதுப்பணி சட்டம் 1977இல் இதற்காக சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இந்த மூன்றாம் பாலினத்தவருக்கான இடஒதுக்கீடானது கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனை இருப்பின் அதை 15 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என அரசு பிறப்பித்துள்ள பொது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரவிசங்கர், ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் ராஜினாமா