பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கேம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையம் (Kempegowda International Airport) மற்றும் நாடபிரபு கேம்பேகவுடாவின் 108 அடி வெண்கல சிலை திறப்பு ஆகிய நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11-ம் தேதி பெங்களூரு செல்ல உள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை அனுப்ப வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு அம்மாநில கல்வித்துறை நவ.8 செய்வாய்கிழமை சுற்றறிக்கை அனுப்பியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாணவர்களை பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கட்டாயம் அழைத்து வரவேண்டும் என தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.