கர்நாடக மாநிலத்தின் பல்லாரி மாவட்டத்தில் இருந்து விஜயநகரத்தைப் பிரித்து, தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டுவந்தது. அப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று விஜயநகர் தனி மாவட்டமாக அறிவிக்க கர்நாடக அமைச்சரவை இன்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்தது. இதன்மூலம், கர்நாடகாவின் 31ஆவது மாவட்டமாக விஜயநகர் உதயமாகியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆனந்த் சிங்கின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்தத் தனி மாவட்ட அறிவிப்பை அமைச்சரவைக் குழு கூட்டம் முடிவு செய்தது.