கர்நாடகா: உத்தரகன்னடா மாவட்டத்திலுள்ள கோகிலபனா என்னும் கிராமத்தின் அருகே காளி என்னும் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றிலிருந்து நேற்று (ஜூலை.01) அதிகாலையில் முதலை ஒன்று வெளியேறி அருகிலிருந்த கிராமத்திற்குள் நுழைந்தது.
இதனைக் கண்ட கிராம மக்கள் அங்கிருந்து தெரித்து ஓட்டினர். தொடர்ந்து, முதலை யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் மெதுவாக சென்றதைக் கண்டதும் கிராம மக்கள் முதலையை பின்தொடர்ந்து சென்றனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த் வனத் துறையினர், முதலையை பிடித்து மீண்டும் ஆற்றுக்குள் விட்டனர்.
இதையும் படிங்க: வ.ஊ.சி பூங்காவில் புதிய வரவாக 14 முதலைகள் !