கடக் (கர்நாடகா): கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள திம்மாப்புரா கிராமத்தின் விவசாயிகள், தாங்கள் விளைவித்த வெங்காயத்தை பெங்களூர் சந்தையில் விற்க கொண்டு வந்தனர். ஆனால் பெரும் லாபத்தை எதிர்பார்த்து வந்த விவசாயிகளுக்கு, கண்ணீர் மட்டுமே வெகுமதியாக கிடைத்தது.
ஏனென்றால் ஒரு குவிண்டால் வெங்காயத்திற்கு ரூ.50, ரூ.100 மற்றும் ரூ.200 என தான் விலை கிடைத்துள்ளது. அதிலும் பாவாடெப்ப ஹல்லிக்கேரி என்ற விவசாயி 205 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்தார். இதில் அவரது அனைத்து செலவுகளும் போக, வெறும் 8 ரூபாய் 36 பைசா மட்டுமே லாபமாக கிடைத்துள்ளது.
அதேபோல் 212 கிலோ வெங்காயம் விற்ற மற்றொரு விவசாயிக்கு அனைத்து செலவுகளும் போக, 10 ரூபாய் மட்டுமே லாபம் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு பெய்த தொடர் மழையாலும் வெங்காயம் விளைவிக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Video: திருமண விழாவில் மயங்கி விழுந்த இளம்பெண் மரணம்!