கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பசவராஜ் பொம்மை நாளை (ஜூலை 30) டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரையும் பொம்மை சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறை டெல்லி செல்லும் பொம்மை இந்த சந்திப்பின்போது தனது புதிய அமைச்சரவை குறித்து பேசவுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாஜக மேலிடத்தின் அழுத்தம் காரணமாக எடியூரப்பா பதவி விலகிய நிலையில், கர்நாடகா முன்னாள் முதலமைச்சரின் எஸ்.ஆர். பொம்மையின் மகனான பசவராஜ் பொம்மை புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எடியூரப்பாவின் நீக்கத்தால் லிங்காயத் சமூக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, அதே சமூகச் சேர்ந்த பசவராஜ் பொம்மைக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தன்பாத் நீதிபதி கொலை: ஆட்டோ ஓட்டுநர் கைது - ஷாக்கிங் சிசிடிவி