பெங்களூரு: தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி அவசர ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது.
தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கக் கோரி காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த, கர்நாடக முதலமைச்சர் சித்ராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
காவிரி விவகாரத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் கர்நாடகவில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க விடக் கூடாது முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த செவ்வாய்கிழமை (செப்.12) முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், விவசாயத்துறை அமைச்சர் சலுவரையாசுவாமி உள்ளிட்ட முத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு காவிரி கையிருப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : உதயநிதி சனாதன விவகாரம்.. நாக்கை அறுத்து, கண்களை பிடுங்கி எறிவோம்... சர்ச்சையை கிளப்பும் மத்திய அமைச்சரின் வீடியோ!