ETV Bharat / bharat

கொழுப்பைக் குறைக்க ஆபத்தான ஆப்ரேஷன் - உயிரிழந்த நடிகை

கன்னட சின்னத்திரை நடிகை ஒருவர் கொழுப்பினை நீக்க, அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேத்தனா ராஜ்
சேத்தனா ராஜ்
author img

By

Published : May 17, 2022, 4:05 PM IST

Updated : May 17, 2022, 4:12 PM IST

பெங்களூரு: கன்னட சின்னத்திரை நடிகை சேத்தனா ராஜ் (21) என்பவர், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொழுப்பினை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

சேத்தனா ராஜ் மருத்துவமனையில் நேற்று (மே 16) காலை அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர், மாலையில் அவரது நுரையீரல் பகுதியில் கொழுப்பு சேரத் தொடங்கியுள்ளது.

இதன்பின்னரே, அவரின் உடல்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவரின் கவனக்குறைவால் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு உள்பட அனைத்துப் பிரிவுகளும் முறையாக செயல்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த அறுவை சிகிச்சை குறித்து தங்களிடம் மகள் சேத்தனாவோ அல்லது மருத்துவர்களோ தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை என நடிகையின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பல கன்னட சின்னத்திரை நாடகங்களில் நடித்துள்ள சேத்தனா, விரைவில் வெளியாகவுள்ள 'ஹவாயாமி' என்னும் திரைப்படத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 95 வயது வரை ஓய்வூதியம் பெறும் குஜராத் முதியவர்!

Last Updated : May 17, 2022, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.