ETV Bharat / bharat

விடைபெற்றது "மிஸ்டர் கபினி"

கர்நாடகத்தில் உள்ள கபினி அணைப்பகுதியில் வாழ்ந்து வந்த மிகவும் புகழ்பெற்ற யானையான ’மிஸ்டர் கபினி’ என்று அழைக்கப்படும் போகேஷ்வரா காட்டு யானை வயது மூப்பின் காரணமாக நேற்று உயிரிழந்தது. தரை வரை தந்தங்களை போகேஷ்வரா யானை வைத்துக்கொண்டு, அவ்வளவு கம்பீரமாய் காட்சியளிக்கும் விதத்தை இனிமேல் பார்க்கமுடியாது. மிஸ்டர் கபினி என அழைக்கப்படும் காட்டுயானை போகேஷ்வரா குறித்து விளக்குகிறது,இந்த கட்டுரை

விடை பெற்றது "மிஸ்டர் கபினி"
விடை பெற்றது "மிஸ்டர் கபினி"
author img

By

Published : Jun 12, 2022, 9:13 PM IST

Updated : Jun 12, 2022, 10:57 PM IST

கர்நாடகம்: கபினி அணைப்பகுதியில் வசித்து வந்த மிகவும் புகழ்பெற்ற யானையான 'மிஸ்டர் கபினி' என்று அழைக்கப்படும் போகேஷ்வரா காட்டு யானை வயது மூப்பின் காரணமாக நேற்று(ஜூன் 11) உயிரிழந்தது. அடர்ந்த காடுகளுக்குள் இறந்ததால் அங்கேயே 'மிஸ்டர் கபினியை' நல்லடக்கம் செய்தனர், வனத்துறையினர்.

மிகவும் செழிப்பான பெரியதாகவும் பரந்து விரிந்திருக்கும் நாகர்ஹோளே தேசியப்பூங்கா தான் போகேஷ்வராவின் பிறப்பிடம். கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர் தூரம் காடுகளுக்குள்ளேயே சுற்றலாம் எனில் அவ்வளவு பெரியதாக அடர்ந்த காடாக இருக்கிறது, நாகர்ஹோளே தேசியப் பூங்கா.

மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள முதுமலைப் புலிகள் சரணாலயம், பந்திப்பூர் தேசியப்பூங்கா என இரு வனவிலங்கு சரணாலயங்களையும் ஒட்டி அமைந்துள்ளது, நாகர்ஹோளே தேசியப் பூங்கா. விலங்குகள் சுதந்திரமாக சுற்றி திரியக் கூடிய மிகப்பெரிய சரணாலயங்கள், இவை.

கபினி அணைப்பகுதியில் அதிகமாக பார்க்கக்கூடிய ஒரு விலங்காக இருப்பது, போகேஷ்வரா யானை. மற்ற யானைகளைப் போல் அல்லாது தரையை முட்டுமளவு தந்தங்களுடன் வளர்ந்திருப்பதால் பார்த்தவுடன் கவரக்கூடிய வகையில் காணப்படுகிறது. முன்னொரு காலத்தில், வாழ்ந்த யானகளின் மூதாதைகளான மாமூத்-களுக்கே தரையை முட்டுமளவு தந்தங்கள் இருந்தன. காலப்போக்கில் இந்த யானைகள் பரிணாம வளர்ச்சியடைந்ததால் இது போன்று பெரிய அளவில் தந்தங்களை கொண்டிருக்கவில்லை.

கம்பீரமாக காட்சியளிக்கும் போகேஷ்வரா
கம்பீரமாக காட்சியளிக்கும் போகேஷ்வரா

யானைகளின் தந்தங்கள் மரக்கிளைகளை உடைத்து சாப்பிடுவதற்கு உதவிகரமாக இருக்கும். தற்போது ஆப்பிரிக்க யானைகள், ஆசிய யானைகள் என இரு வகை யானைகள் இருக்கின்றன. இதில் ஆசிய யானைகளில் ஆண் யானைகளில் மட்டுமே தந்தங்கள் காணப்படும். ஆப்பிரிக்க யனைகளில் பெண் யானைகளிலும் தந்தங்கள் காணப்படும்.

போகேஷ்வரா யானைக்கு காணப்படும் மிக நீண்ட தந்தங்கள் இந்தியாவில் வேறு எந்த யானைகளிடமும் காணப்படாதது. தந்தங்கள் மட்டுமல்லாது உருவத்திலும் மிரட்சி ஏற்படுத்தக்கூடியது. யானைகளுக்குகே உரித்தான கம்பீரத்தோடு தன்னுடைய சாதுவான குணத்தினால் இருப்பதால் காட்டுயிர் புகைப்படக்கலைஞர்களின் பேவரைட், இந்த போகேஷ்வரா.

10 அடி தூரம் வரையிலும் புகைப்படம் எடுக்க மக்கள் சென்றாலும் ஒரு சத்தம் கூட கொடுக்காமல் அமைதியாக இருக்கக்கூடிய யானை. இதனால் இந்தியா முழுவதுமுள்ள காணுயிர் புகைப்படக் கலைஞர்கள் போகேஷ்வராவை பார்ப்பதற்கும் புகைப்படம் எடுக்கவுமே நாகர்ஹோளே தேசியப்பூங்காவிற்கு வருகை தருகின்றனர். இதனாலேயே “மிஸ்டர் கபினி” எனப் பெயரானது, போகேஷ்வராவிற்கு.

”மிஸ்டர் கபினி” இறுதி புகைப்படம்
”மிஸ்டர் கபினி” இறுதி புகைப்படம்

கபினி அணைப்பகுதியைத் தாண்டி வேறு எங்கும் செல்லக்கூடியதல்ல, போகேஷ்வரா. நாகர்ஹோளே தேசியப் பூங்காவிற்கு அருகில் கபினி அணை இருப்பதால், அது வசிக்கும் பகுதி எல்லா பருவங்களிலும் செழிப்பான காடாக காட்சியளிக்கிறது. உணவும் தண்ணீரும் ஒரே இடத்தில் கிடைப்பதால் போகேஷ்வரா யானை எங்கும் செல்லாமல் இந்தப் பகுதிகளிலேயே அதிகமாக சுற்றிக்கொண்டிருக்கும்.

இதுவரை எந்த ஒரு உயிர்ச்சேதமும் ஏற்படுத்தாமலும், மனிதர்களின் வீடுகளை சேதப்படுத்தமாலும், விளைநிலங்களுக்குள் செல்லாததாலும் அந்தப்பகுதி மக்கள் “கிங் ஆஃப் கபினி” எனப்பெயர் சூட்டி அழைக்கின்றனர். கர்நாடகாவிலேயே இது போன்ற கம்பீரமான ஒரு காட்டு யானை கிடையாது எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

விடை பெற்றது "மிஸ்டர் கபினி"

மக்களால் அதிகம் போற்றப்பட்டு, பிறந்தது முதல் இறப்பு வரை காட்டு யானையாகவே கம்பீரமாக இயற்கையான முறையில் வாழ்ந்து உயிரிழந்த போகேஷ்வரா நமக்கு உணர்த்துவது ஒன்றைத்தான். தன்னுடைய தேவைகள் தனது இருப்பிடத்திலேயே கிடைக்கும்போது மனிதர்களை நோக்கி யானைகள் வராது.

இதையும் படிங்க :கர்நாடகாவில் 'கழுதைப்பண்ணை' திறப்பு!

Last Updated : Jun 12, 2022, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.