ETV Bharat / bharat

5,000 ஓட்டுக்களைக் கூட தாண்டாத ஒவைசிக் கட்சி - ஹைதராபாத் தொகுதி எம்.பியான அதாதுதீன் ஒவைசி

உ.பிஇல் தனித்து களம் கண்ட ஒவைசியின் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்க முடியாமல் படுதோல்வி கண்டது.

AIMIM in UP polls
AIMIM in UP polls
author img

By

Published : Mar 11, 2022, 9:31 AM IST

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜக அமோக வெற்றி பெற்று யோகி ஆதித்தயநாத் மீண்டும் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.

ஹைதராபாத் தொகுதி எம்.பியான அதாதுதீன் ஒவைசியின் கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி உ.பி. தேர்தலில் தனித்து களம் கண்டது. சுமார் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இக்கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், தேர்தலில் வெறும் 0.43 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்று ஒவைசியின் கட்சி படுதோல்வி கண்டது. குறிப்பாக இக்கட்சியால் எந்தவொரு தொகுதியிலும் ஐந்தாயிரம் ஓட்டுக்களைக் கூட தாண்ட இயலவில்லை.

தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒவைசி, "உ.பி மக்கள் பாஜகவுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்கியுள்ளனர். இம்முடிவுக்கு நான் மதிப்பளிக்கிறேன். தேர்தலில் தங்கள் தோல்வியை மறைக்க கட்சிகள் வாக்கு இயந்திரங்களான இவிஎம் மெசின்களை குறை கூறுவார்கள்.

ஆனால், உண்மையில் தேர்தல் முடிவுகளின் சிப்புகள் மக்களின் மனதில் உள்ளது. இந்த தேர்தல் வெற்றி 80-20க்கான(80 மற்றும் 20 விழுக்காடு மக்களுக்கு இடையே). உத்தரப் பிரதேசத்தில் சிறுபான்மையினர்கள் வாக்குவங்கிகளாகவே இதுவரை இருந்துள்ளனர்" என்றுள்ளார்.

இதையும் படிங்க: இந்திய அரசியலின் போக்கை மாற்றி காட்டியவர் மோடி - ஜெபி நட்டா புகழாரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.