ETV Bharat / bharat

Rasipalan: துலாம் ராசிக்காரர்களுக்கு பண வரவு! உங்கள் ராசிக்கு எப்படி? - மிதுனம் ராசி பலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ஜூன் 12-ஆம் தேதிக்கான பலன்களை பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 12, 2023, 6:35 AM IST

Updated : Jun 12, 2023, 6:41 AM IST

மேஷம்: இசை, நடனம் அல்லது நீண்ட காலமாக ஆர்வம் கொண்ட ஏதாவது ஒரு விஷயத்தை கற்க வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை நிறைவேற்றலாம். இந்த நாள் உங்களுக்கு ஒரு நல்ல, சிறப்பான நாளாக அமையும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் உங்களுக்கு வெற்றி வந்து சேரும்.

ரிஷபம்: உங்களுக்கு நெருக்கமானவர் அனைவரும் நீங்கள் எதிர்பார்க்கும் ஆதரவை கொடுக்கவில்லை என நினைக்கலாம். நிதர்சனத்தை புரிந்து கொள்ளவும், உணர்ச்சிவசப்படாமல் இருக்கவும் முயற்சி செய்ய வேண்டும். குடும்பத்தில் சண்டை வெடிக்கலாம் என்று கணிப்பு சொல்கிறது. மோதல்களைத் தவிர்க்கவும், பிரச்சனையை சரியாகக் கையாளவும் உதட்டில் புன்னகையை அணிந்து கொள்வது அவசியம்.

மிதுனம்: பணிகளைச் செய்து முடிக்க மூளையை கசக்கிப் பிழிய வேண்டியிருக்கும். இருந்தாலும் தாழ்மையுடன் நடந்து கொள்வதும் உங்களுக்கு சாதகமாக இருக்காது. உண்மையில் நீங்கள் முதலாளியாக இல்லாவிட்டாலும் கூட, அது போன்ற தோரணையைக் காட்ட வேண்டியிருக்கும். அசாதாரண புத்திசாலித்தனம், அபாரமான செயல்திறனாக வெளிப்பட்டு உங்களுக்கு பாதுகாப்பான அரணாகும். குடும்பம் தான் உங்கள் வெற்றிக்கு அடித்தளம் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

கடகம்: கடினமாக உழைத்து வேலை அல்லது வியாபாரத்தில் உங்களுக்கான இடத்தை தக்க வைப்பீர்கள். கூட்டாளிகளுடனான உறவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நெருக்கமாகும். நெகிழ்வும், மகிழ்ச்சியும் குடும்பத்தில் நிலவும். அன்புக்குரியவருடன் இணைந்து இன்றைய மாலைப் பொழுதை உல்லாசமாக செலவிடுவீர்கள்.

சிம்மம்: வாழ்க்கையின் ஒரு முக்கிய தருணமாக இருந்தால் அதற்கு ஆச்சரியப்பட வேண்டாம். இது சொந்த வாழ்க்கை அல்லது வேலை தொடர்பான முக்கிய விஷயத்தை கவனமாக கையாண்டு, நாசூக்காக செயல்படவேண்டும். நடுநிலைமையை கடைப்பிடியுங்கள். சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயர்ந்து மிகப்பெரிய ஊக்கத்தை கொடுக்கும் என்பது நிச்சயம்.

கன்னி: உங்களுக்குள் மறைந்திருக்கும் கலைத்திறன் வெளிப்பட்டு உங்களுக்கான நாளாக உருவாகும். சிறந்த கதாநாயகன் மற்றும் நகைச்சுவை நடிகர்களின் குறிப்பிடத்தக்க திறன்கள் உங்களுக்குள் இருப்பதை வெளிக்கொணர்வீர்கள். உங்கள் நகைச்சுவை உணர்வால், சுற்றி இருப்பவர்களின் மாலை நேரத்தை மகிழ்ச்சியாக்குவீர்கள். இருப்பினும், பிற அவசர காரியங்கள் மற்றும் கடமைகளை செய்வதற்காக உங்கள் சக்தியை கொஞ்சம் சேகரித்து வையுங்கள்.

துலாம்: எல்லா கேள்விகளுக்கான விடைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சிறிய விஷயங்களையும், சிக்கல்களையும் பற்றி கவலைப்படும் நாளாக இன்றைய தினம் இருந்தாலும், பல்வேறு ஆதாரங்களில் இருந்து பணவரவிற்கு வாய்ப்பு இருக்கிறது. மனதை சமநிலையாக வைத்திருந்தால், வேலையில் அற்புதமான முடிவுகளை எடுக்க முடியும்.

விருச்சிகம்: வெவ்வேறு விருப்பங்கள் மற்றும் மனோநிலை கொண்ட மக்களை சந்திக்கலாம். அதில் சிலர் உங்களை அதிர்ச்சியடையச் செய்யலாம். வேறு சிலரோ உங்களை ஆச்சரியப்படச் செய்யலாம். சில நேரங்களில், உங்களுடைய வெற்றியை பிறர் வேறுபட்ட விதத்தில் பார்ப்பது ஏன் என்பதை புரிந்துகொள்வது கடினம். இவற்றை புத்திசாலித்தனம் மற்றும் விவேகத்துடன் கையாள்வது நல்லது.

தனுசு: நீங்கள் பெருமிதப்படுத்தும் உயர்ந்த நிலையில் இருப்பீர்கள். பரவச உணர்வால் ஆக்ரமிக்கப்பட்டிருப்பீர்கள். உங்கள் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளால் நீங்கள் எடுக்கும் பணி எல்லாம் சிறப்பாக முடியும். உள்ளுக்குள் இருந்து வரும் குரலின் மீது நம்பிக்கை வையுங்கள். அது சரியான பாதையில் உங்களை வழிநடத்தும். சர்வ வல்லமையுள்ள இறையாற்றலின் கருணை உங்கள் மேல் இருக்கிறது. இந்த நாளை நல்ல நாளாக மாற்றிக் கொள்ளவும்.

மகரம்: நாள் முழுவதும் வேலை மற்றும் பொறுப்புகளால் சூழப்பட்டிருப்பதால் ஏற்படும் அழுத்தத்தால், உங்கள் ஆற்றல் குறைந்தாலும், உங்கள் உற்சாகம் மட்டும் குறையாது. போட்டியாளர்களுடன் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருந்தால், நாளின் பிற்பகுதியில் மிகவும் சோர்ந்துவிடுவீர்கள். நீங்கள் சண்டையிட்டு வெற்றி பெறுவீர்கள் என்றாலும், புத்திசாலித்தனமாக நடந்துகொண்டு, சரியான செயல்களை செய்ய வேண்டும்.

கும்பம்: சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் பரப்ப விரும்பும் உங்கள் விருப்பம் இன்று நிறைவேறும். எனினும், பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமானால், உங்கள் சொந்த முன்னுரிமைகள் மற்றும் நலன்களை தியாகம் செய்ய வேண்டும். பிறருக்காக நீங்கள் களத்தில் நின்றாலும் உங்கள் பின்னால் யாரும் இருக்க மாட்டார்கள். இதனால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

மீனம்: செலவுகள் அதிகம் இருந்த போதிலும், தேவையுள்ள செலவுகளுக்கு திட்டமிட்டு, தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமித்தல் அவசியமாகும். தக்க தருணத்தில் அந்த சேமிப்பு உங்களுக்கு கைகொடுத்து உதவலாம்.

இதையும் படிங்க: Weekly Rasipalan: குடும்ப பிரச்னைகளைச் சந்திக்க உள்ள ராசிகள்!

Last Updated : Jun 12, 2023, 6:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.