பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்கிறார் அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவராக கே. அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

ஊரடங்கு நீட்டிப்பா? - இன்று ஆலோசனை
தமிழ்நாட்டில் ஊரடங்கு வரும் ஜூலை 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

திமுக எம்எல்ஏ.,க்கள் எம்.பி.க்கள் கூட்டம்
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏ.,க்கள் எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை
கரோனா பரவல் குறித்து கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆலோசனை
தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஜூலை 16 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா ஆலோசனை நடத்துகிறார்.