லக்னோ:உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தில் கட்ரா சாலை அருகேயுள்ள செங்கல் சூளையில், சுலாப் ஸ்ரீவஸ்தவா என்னும் தொலைக்காட்சி செய்தியாளர் நேற்று இரவு(ஜுன் 13) காயங்களுடன் கிடந்தார்.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு அவர் முன்னரே உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
தனது இருசக்கர வாகனத்தில், பணி முடித்து ஸ்ரீவஸ்தவா, இரவு 11 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், கட்ரா சாலையில் இருந்த அடி நீர் குழாயில் இடித்து, ஸ்ரீவஸ்தவா தூக்கி வீசப்பட்டார் என அப்பகுதி காவல் துறையினர் விபத்து குறித்து தகவல் தெரிவித்தனர்.
கொலைசெய்யப்பட்டாரா செய்தியாளர்?
ஆனால், காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், கள்ளச்சாராய மாஃபியா கும்பல் குறித்து ஸ்ரீவஸ்தா பதிவு செய்த செய்தியால் அதிருப்தியடைந்த சிலர், அவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
![பிரியங்கா காந்தியின் ட்வீட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12124831_u.jpg)
இந்நிலையில், ஸ்ரீவஸ்தவாவின் இறப்பு குறித்து காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி, மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சுட்டிக்காட்டி கடுமையாக ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: ராஜபர்பா: ஒடிசாவில் பெண்மையைப்போற்றும் விழா தொடக்கம்