உலகம் முழுவதும் டெல்டா, எட்டா (Eta) போன்ற வகை கரோனா வேகமாகப் பரவிவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதனால் பல நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி தடுப்பூசி தயாரிப்பதை மேலும் தீவிரப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அதன் ஒரு தவணை தடுப்பூசிக்கு அவசரப் பயன்பாடு அங்கீகாரத்திற்கு (EUA) மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளதாக நேற்று (ஆகஸ்ட் 6) தெரிவித்தது.
இதற்கு மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக இது தொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும், ஒற்றை தவணை கோவிட்-19 தடுப்பூசியை இந்திய மக்களுக்கும், உலகின் பிற பகுதிகளுக்கும் பயோலாஜிக்கல் லிமிடெட் உடன் இணைந்து கொண்டுசெல்வோம்.
எங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பயோலாஜிக்கல் நிறுவனம் ஒரு முக்கியப் பகுதியாக இருக்கும்” என்றார்.
இதையும் படிங்க: கோவிட் தடுப்பூசிக்கு அனுமதி கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் விண்ணப்பம்!