டெல்லி : உலகளாவிய சுகாதார நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் இந்தியாவில் கோவிட் -19 தடுப்பூசியின் அவசர பயன்பாடு அங்கீகாரத்திற்கு (EUA) விண்ணப்பித்துள்ளதாக வெள்ளிக்கிழமை (ஆக.6) தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்நிறுவனம் தனது கோவிட் -19 தடுப்பூசியை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் உறுதியாக இருப்பதாகக் கூறியது.
இந்நிலையில் ஆகஸ்ட் 5, 2021 அன்று ஜான்சன் அண்ட் ஜான்சன் பிரைவேட் லிமிடெட் அதன் கோவிட் -19 தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு விண்ணப்பித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும், இது நிறுவனத்தின் ஒற்றை டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை இந்திய மக்களுக்கும், உலகின் பிற பகுதிகளுக்கும் பயோலாஜிக்கல் லிமிடெட் உடன் இணைந்து கொண்டு வழி வகுக்கிறது.
எங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலி நெட்வொர்க்கில் உயிரியல் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும்” என்றார்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 44 ஆயிரத்து 643 புதிய கரோனா வைரஸ் புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 18 லட்சத்து 56 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது, மருத்துவ சிகிச்சையில் உள்ள பாதிப்பாளர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : டெல்டா வகை வைரஸிலிருந்தும் பாதுகாக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகள்!