பாரமுல்லா (ஜம்மு-காஷ்மீர்): ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் சோபோரில் நேற்று(செப்-9) லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து சோபோர் போலீசார் கூறுகையில், ‘சோபூர் காவல் நிலையத்தின் எல்லையில் உள்ள கௌசியாபாத் சௌக் சின்கிபோராவில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை சேர்ந்து சோதனைச் சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.
அப்போது 2 பேர் சந்தேகத்திற்கு இடமாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதோடு சோபரில் பதுக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் குறித்து தெரியவந்ததையடுத்து, அவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க:சோனாலி போகத் வழக்கு: ஹோட்டலை இடிக்கும் பணி தொடக்கம்...