ETV Bharat / bharat

குலாம் நபி ஆசாத்திற்கு ஆதரவு... 70 மூத்த தலைவர்கள் ராஜினாமா - கதறும் காங்கிரஸ் - காரிய கமிட்டி உறுப்பினர்

காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் விலகிய நிலையில், அவரைத்தொடர்ந்து 70-க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் அக்கட்சியில் இருந்து இன்று விலகியுள்ளனர்.

குலாம் நபி ஆசாத்திற்கு ஆதரவு
குலாம் நபி ஆசாத்திற்கு ஆதரவு
author img

By

Published : Aug 30, 2022, 7:03 PM IST

ஜம்மு: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத், கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 26) அன்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக 2005 -2008 காலகட்டங்களில் பதவிவகித்தார்.

கடந்த 50 ஆண்டுகாலமாக கட்சிப்பணியாற்றிய அவர், அக்கட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தொடர்ந்து, பாஜகவில் இருந்து இணையப்போவதாக வெளியான தகவலை மறுத்த அவர், ஜம்மு காஷ்மீரில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கப்போவதாகத் தெரிவித்தார்.

அவரின் விலகலை அடுத்து, முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டப் பல காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து இருந்து விலகியுள்ளனர். உள்ளாட்சி உறுப்பினர்கள் உள்பட பல்வேறு அடுக்குகளில் அவருக்கு ஆதரவு உள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் தாரா சந்த் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள், அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

மேலும், தங்களின் ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளனர். அதைத் தொடர்ந்து, தாரா சந்த், முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீத் வானி, மனோகர் லால் சர்மா, காரூ ராம், முன்னாள் எம்எல்ஏ பல்வான் சிங் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில், தாங்கள் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தனர்.

அப்போது பேசிய பல்வான் சிங்,"குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், எங்களது கூட்டு ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளோம்" என்றார்.

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி மற்றும் 12 காரிய கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் இதில் போட்டியிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் அக். 17ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தேர்தலின் முடிவுகள் அக்.19ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அவசரத்தில் திறக்காத ஆம்புலன்ஸ் கதவு... விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.