ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள குமார்துபியில் ரூ.1,000 கடனைத் திருப்பிச் செலுத்தாததை காரணம் காட்டி பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் குமார்துபி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கார்த்தி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரிடம் 7,000 ரூபாய் கடன் பெற்றேன். அதில் 6,000 ரூபாய் திருப்பி செலுத்திவிட்டேன். மீதமுள்ள 1000 ரூபாயை உடனடியாக கொடுக்கும்படி வற்புறுத்தினார்.
2 நாள்களில் கொடுப்பதாக தெரிவித்தேன். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை எனது கணவர் வழக்கம்போல் பணிக்கு சென்றார். குழந்தைகளும் பள்ளிக்கு சென்றனர். அந்த நேரத்தில் கார்த்தி வீட்டுக்குள் புகுந்து என்னை பாலியல் வன்புணர்வு செய்தார். அதன்பின் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து எனது கணவரிடம் தெரிவித்தேன். அதன்பின் இருவரும் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தோம். இதனிடையே கார்த்தி எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமை செய்து இளம்பெண் கொலை; தாயின் தவறான உறவில் நேர்ந்த விபரீதம்