ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ஜெகநாத்பூரில் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் கணவர் தனது குழந்தையை அணையில் வீசி கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து ஜெகநாத்பூர் போலீசார் தரப்பில், ஜெகநாத்பூரை சேர்ந்த அமித்குமார்-சாக்ஷி தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்தது. இந்த குழந்தை நவம்பர் 5ஆம் தேதி முதல் காணவில்லை என்று எங்களிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அமித்குமார்-சாக்ஷி தம்பதி அளித்தனர். இதனிடையே எங்களுக்கு அமித்குமார் நடவடிக்கையின் மீது சந்தேசம் ஏற்பட்டது. அதனால் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
அதாவது அமித்குமாருக்கு மனைவி சாக்ஷியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு பிறந்த குழந்தை தன்னுடையது கிடையாது. அவருடன் தொடர்பில் உள்ள மற்றொருவர் மூலகமாக பெற்றது என்று முடிவெடுத்துள்ளார். அதன்காரணமாக சம்பவ நாளன்று குழந்தையை வெளியே அழைத்து சென்று, துருவ அணையில் வீசியுள்ளார். அதன்பின் வீட்டிற்கு வந்து குழந்தையை காணவில்லை என்று நாடகமாடியுள்ளதை கண்டுபிடித்தோம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் போலீசார் துருவ அணைக்கு விரைந்து குழந்தையின் உடலை மீட்டனர். இதனிடையே அமித்குமார் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: தெஹ்ரி ஏரியில் 25 நிமிடங்களாக தத்தளித்த இளைஞர்