ஐஐடி, என்ஐடிக்கள் உள்ளிட்ட பொறியியல் உயா்கல்வி நிறுவனங்களில் பிஇ., பி.டெக்., படிப்புகளில் சோ்வதற்கு பொதுவாக நடத்தப்படுபவை ஒருங்கிணைந்த ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள். இத்தேர்வுகள் ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்பட்டு வருகின்றன.
915 தேர்வு மையங்கள்
இந்தத் தேர்வுகளை 334 நகரங்களில் அமைக்கப்பட்ட 915 தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வெழுதினர். இத்தேர்வு இந்தியாவைத் தவிர பஹ்ரைன், கொலம்போ, துபாய், காத்மாண்டு, ரியாத், ஷார்ஜா, கோலாலம்பூர், தோஹா, லகோஸ், சிங்கப்பூர், குவைத் உள்ளிட்ட 12 பெருநகரங்களிலும் 13 மொழிகளில் நடத்தப்பட்டது.
4 கட்டத் தேர்வுகள்
முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்வுகள் முறையே பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் நடந்தன. தொடர்ந்து கரோனா காரணமாக ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற வேண்டிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மூன்றாம் கட்டமாக ஏப்ரலில் நடக்க வேண்டிய தேர்வு ஜூலை 20 முதல் 25 வரை நடந்து முடிந்தன.
தொடர்ந்து கரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியதை அடுத்து நான்காம் கட்டத் தேர்வுகள் ஆக்ஸ்ட் 26ஆம் தேதி முதல் செப்.2ஆம் தேதி வரை நடைபெற்றன.
44 மாணவர்கள் 100% மதிப்பெண்கள்
இந்நிலையில் முன்னதாக அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 18 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர்.
இந்த நான்கு கட்டத் தேர்வுகளிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களில் சிறந்த மதிப்பெண்களைக் கொண்டு இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
13 மொழிகளி தேர்வுகள்
இத்தேர்வுகள் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, அஸ்ஸாமி, பெங்காலி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்பட்டது.
மெய்ன் தேர்வுகளை மொத்தம் 9.34 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெங்களூருவில் கோர விபத்து: 30 அடியிலிருந்து விழுந்த இருவர் உயிரிழப்பு