ஜம்மு காஷ்மீரின் பார்முல்லாவில் நேற்றிரவு தூங்கிக்கொண்டிருந்த ஒரு குடும்பம் தூக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரமுல்லா மாவட்டத்தின் பதான் பகுதியில் உள்ள நிஹல்பூரா கிராமத்தில் வசிக்கும் முகமது மக்பூல் லோன் (43), அவரது மனைவி ஹசீனா பேகம் (40), மகன் தலிப் ஆகியோர் நேற்றிரவு எப்போதும் போல தூங்கிக் கொண்டிருந்தனர்.
விடியற்காலையில் மூவரும் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்க்கும்போது மூவரும் மயக்கநிலையில் கிடந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மூவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர், ’நச்சு வாயு வெளியேற்றத்தினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என வெளிப்படையாகத் தெரிகிறது, உடற்கூராய்வு முடிவுகள் அடிப்படையிலேயே முழு விவரமும் தெரிய வரும்’ என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:'அனுபவா மண்டபம்'- எடியூரப்பா அடிக்கல்!