ETV Bharat / bharat

அமைதியை கனவு காணும் ஜம்மு காஷ்மீர்!

ஜம்மு காஷ்மீரின் நிலை குறித்து, அம்மாநிலத்தின் முக்கியக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி அண்மையில் ஆலோசனை நடத்தினார். இதுவும், இரண்டு நாள்களுக்கு முன் நடந்த குண்டுவெடிப்பும், எந்த புள்ளியில் இணைகின்றன என்பது குறித்து இத்தொகுப்பில் காணலாம்.

modi
மோடி
author img

By

Published : Jun 28, 2021, 7:46 PM IST

Updated : Jun 28, 2021, 8:03 PM IST

டெல்லி: ஜம்மு காஷ்மீரின் உண்மையான நிலை என்பது வெளி உலகுக்கு முழுமையாகத் தெரியவில்லை.

அங்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது அமைதியை நிலைநாட்டியதாக ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், அப்பாவி மக்கள் அனுபவிக்கும் இன்னல்களுக்கு மத்தியில் தான் அந்த அமைதியிருக்கும்.

ஜம்மு காஷ்மீரில், அமைதியை நிலைநாட்ட கடந்த 2019ஆம் ஆண்டில், ஒன்றிய பாஜக அரசு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவுகளான 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை விலக்கிய ஒன்றிய அரசு, ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, லடாக், ஜம்மு காஷ்மீர் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள சிக்கல்கள்
ஜம்மு காஷ்மீரில் உள்ள சிக்கல்கள்

இந்த நடவடிக்கையை விமர்சித்த பல அரசியல் கட்சிகள், ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு ஒன்றிய பாஜக அரசு துரோகம் இழைத்ததாகச் சாடின.

கடந்த இரண்டு ஆண்டுகளில், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கும் மாநில தலைவர்கள் பலர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.

பிரதமரைச் சந்தித்த அரசியல் தலைவர்கள்

இந்த இரண்டு ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீர் பல அரசியல் நாடகங்களைக் கண்டுள்ளது. ஒன்றிய அரசு ஜனநாயகத்தை கேள்விக்கு உள்ளாக்குவதாகத் தெரிவித்த அரசியல் தலைவர்கள் பலர், பிரதமர் மோடியைச் சந்தித்தனர்.

பிரதமர் மோடியை சந்தித்த அரசியல் தலைவர்கள்

கடந்த ஜூன் 25ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தியது யாரும் எதிர்பாராதது.

அந்தக் கூட்டத்தில், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கான உறுதியான அர்ப்பணிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள சிக்கல்கள்

இது ஒருபுறம் இருக்க, அதிகாரத்தளமாக இருக்கும் டெல்லி, அமைதிக்கும் போராடும் ஜம்மு ஆகியவற்றிற்கு இடையிலான நம்பிக்கையின்மை, ஜம்மு காஷ்மீர் விமானப்படை தளத்தில், நேற்று (ஜூன்.27) அதிகாலை இரண்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த 'ட்ரோன்' தாக்குதல் இந்தியாவில் முதல்முறையாக நடந்துள்ளதாக, ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

இக்கட்டான சூழலில் நடந்த இந்தத் தாக்குதல், ஜம்முவில் அமைதியை நிலைநாட்டுவதில் இருக்கும் சிரமங்களை கானல்நீர் போல காட்டுகிறது.

எந்நேரமும் போருக்கான சூழலை கொண்டிருக்கும் ஜம்மு காஷ்மீரில், பயங்கரவாத சம்பவங்களைக் குறைக்கவே மாநில சிறப்பு அந்தஸ்தை நீக்கியதாக ஒன்றிய பாஜக அரசு தெரிவித்தது.

அதில் ஒரு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது.

ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததன் மூலம், பல போராளிகளின் எதிர்ப்பு நீர்த்துபோனது. சிலர் வன்முறையைக் கைவிட்டு, பொது நீரோட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அமைதியை நிலைநாட்டுவதில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சிக்கல்களை களைந்து, சமாதானத்தை மீட்டெடுப்பது ஒன்றிய அரசின் முக்கியப் பணியாகும்.

அத்தகைய சிக்கல்களில், பாகிஸ்தான் அல்லது பிரிவினைவாதிகள் இருவரையும் அனுசரித்து போவது அல்லது தவிர்ப்பது என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இறையாண்மையும், ஜனநாயகமும் அவர்களை இணைத்துக் கொள்ளும் பேச்சுவார்த்தைக்கு வழிசெய்கிறது.

அவற்றைத் தவிர்ப்பது பயங்கரவாதத்தையும், தேவையில்லாத தொந்தரவையும் ஏற்படுத்த வல்லவை.

ட்ரோன் தாக்குதல்

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக, ஜம்மு காஷ்மீர் விமானப்படை தளத்தில் நடந்த ட்ரோன் தாக்குதல் அதற்கு ஒரு உதாரணம்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, பிரிவினைவாதிகள், பாகிஸ்தான் தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதன் அவசியத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இது சரியான முறையில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது, மீண்டும் தலிபான்கள் வலுபெறுவதற்கு வழி செய்யும், இது இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை பலப்படுத்தலாம்.

லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடனான தலிபான்களின் தொடர்புகள், ஜம்மு காஷ்மீரில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அதிகாரம் அதிகரிப்பது, பயங்கரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவு ஆகியவை ஜம்மு காஷ்மீரில் மாநில சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அமல்படுத்துவதிலும், அமைதியை நிலைநாட்டுவதில் மிகப்பெரியத் தடையாக இருக்கும்.

பல தசாப்தங்களாகத் தொடரும் இந்த யுத்தம் ஜம்முவில் ஒருபோதும் அமைதியை அனுமதிக்காது. அம்மாநிலத்தில் உள்ள தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்துள்ளது இடையூறின்றி அமைதியை நோக்கி நகர்வதற்கான தூண்டுகோல்.

இதையும் படிங்க:உலக சுற்றுச்சூழல் தினம்: பிரதமர் மோடி உரை

Last Updated : Jun 28, 2021, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.