ஸ்ரீநகர் (ஜம்மு மற்றும் காஷ்மீர்): ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள, கோகர்நாக் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படைவீரர்களுக்கும் இடையே இன்று பிற்பகல் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையினர் சிலர் காயம் அடைந்துள்ளனர் என காஷ்மீர் மண்டல காவல் துறை தனது "X" பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சூடு குறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கும் போது, ஹல்லோரா கிராமத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கி சூட்டில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் மற்றும் இராணவ அதிகாரி ஒருவர் காயமடைந்து உள்ளதாகவும், இவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு பின் தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தாக கூறப்படுகின்றன.
இதையும் படிங்க: இறந்த உடலை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்ற உறவினர்கள் - ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காததால் நேர்ந்த அவலம்.!
மேலும் காவல் துறை அதிகாரி தெரிவிக்கும் போது, ஹல்லோரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் ராணுவ வீரர்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதியை இன்று மதியம் சுற்றி வளைத்தனர். இதற்கு கிடையில் தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளார். இதில் பாதுகாப்பு படைவீரர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளன.
-
#Encounter has started in #Kokernag area of #Anantnag. Officers from Army and JKP injured. Details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) September 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Encounter has started in #Kokernag area of #Anantnag. Officers from Army and JKP injured. Details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) September 13, 2023#Encounter has started in #Kokernag area of #Anantnag. Officers from Army and JKP injured. Details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) September 13, 2023
கடந்த மூன்று தினங்களில் ஜம்மு மற்றும் காஷ்மீர் சுற்றியுள்ள கிராமங்களில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இதுவரை மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக நேற்று (செப்.12) மற்றும் இன்று (செப்.13) ஆகிய இரண்டு தினங்களில் ரஜோரியில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்த ரஷ்ய அதிபர் புதின் - வடகொரியத் தலைவர் கிம் சந்திப்பு!