வாஷிங்டன்: காலிஸ்தான் அமைப்பின் தலைவர் நிஜ்ஜார், இந்தியாவில் இருந்து வெளியேறி கனடாவில் வசித்து வந்தார். கனடா நாட்டின் குடியுரிமை பெற்றிருந்த அவர் கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி அடையாளம் தெரியாத இருவர் சுட்டுக்கொலை செய்தனர்.
இந்தக் கொலையில் இந்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு (Agency) தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். மேலும், கனடாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரியை வெளியேற்றவும் கனடா உத்தரவிட்டது. அதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தின் உயர் அதிகாரிகளை வெளியேறும்படி இந்திய அரசு தெரிவித்தது.
இதனால், இரண்டு நாடுகள் இடையிலான உறவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்க விரும்பவில்லை எனவும் இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்க விரும்புவதாகவும் அண்மையில் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
ஆனாலும், இந்த விவகாரம் அப்படியே சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கனடாவின் வெளியுறவுத்துறை மந்திரி மெலனி ஜோலி ஆகியோர் அமெரிக்காவின் வாஷிங்டனில் ரகசிய சந்திப்பில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடா தூதர் அதிகாரிகள் மற்றும் இருநாட்டு ராஜதந்திர உறவுகள் பாதிப்பு ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்த ரகசிய சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: "தெரு தெருவாக, வீடு வீடாக சோதனையிட்டு ஹமாஸ் பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள்" - இஸ்ரேல் பிரதமர்!