மும்பை: ஸ்ரீ சம்மத் ஷிகர்ஜி, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பரஸ்நாத் மலைகளில் அமைந்துள்ள ஒரு புனிதமான ஜெயின் யாத்திரை தலமாகும், இதனை சமீபத்தில் ஜார்க்கண்ட் அரசாங்கம் ஒரு சுற்றுலா தலமாக அறிவித்தது. இதனை கண்டித்து கடந்த மூன்று நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் ஜெயின் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் படி டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் ஜெயின் சமூகத்தினர் ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து இன்று மும்பையில் உள்ள ஜெயின் சமூகத்தினர் போராட்டத்தில் ஈட்பட்டனர். இந்நிலையில் ஜார்கண்ட் அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மும்பை மெட்ரோவில் இருந்து தொடங்கி ஆசாத் மைதானம் வரை பேரணியாக நடந்து சென்றனர்.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில் “ஜார்கண்ட் அரசாங்கத்தின் இந்த முடிவு எங்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. புனிதமான இடத்தை சுற்றி சுற்றுலா வருவதை நாங்கள் விரும்பவில்லை. கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு!