ஐதராபாத்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில், ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், விநாயகன், சுனில், யோகிபாபு உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
நெல்சனின் வழக்கமான காமெடி கலந்த ஆக்ஷ்சன் பார்முலா இயக்கம் ரசிக்கர்களை உற்சாகமடைய செய்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்று உள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த நிலையில், படத்தின் வசூல் நிலவரம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் முதல் வார இறுதியில் ரூ 100 கோடிக்கு மேல் வசூல் ஜெயிலர் திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன முதல் நாளில் 48.35 கோடி ரூபாய் வசூலித்ததாக முன்னணி தனியார் வர்த்தக போர்டலான சாக்னில்க் தெரிவித்து உள்ளது. அதன்பிறகு அடுத்தடுத்த நாட்களின் முறையே ரூ.25.75 கோடி மற்றும் ரூ.35 கோடி வசூல் செய்தது.
படத்தின் மொத்த வசூல் தொகை ரூ.109.10 கோடியாக உள்ளது. இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படமாக ஜெயிலர் திரைப்படம் அமைந்துள்ளது. வரும் சுதந்திர தினம் உள்ளிட்ட விடுமுறை நாட்கள் வருவதை முன்னிட்டு,வசூல் அதிகரிக்க கூடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள். இந்த வார இறுதிக்குள் ஜெயிலர் படத்தின் வசூல் கலெக்சன் 180 கோடியை தாண்டி விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பாக ஜெயிலர் படத்தின் அவுட்புட்டை பார்த்த ரஜினிகாந்த் பின்னர் இமயமலைக்கு ஏழு நாட்கள் ஆன்மிக பயணம் ரஜினிகாந்த் சென்று உள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி: சமூக வலைதள பக்கங்களில் முகப்பு படங்களை மாற்றிய பிரதமர்!