ETV Bharat / bharat

கர்நாடக மேலவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்களாக ஜெகதீஷ் ஷெட்டர், போஸ்ராஜூ அறிவிப்பு! - கர்நாடக இடைத் தேர்தல்

கர்நாடக எம்.எல்.சி இடைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களாக ஜெகதீஷ் ஷெட்டர், போஸ்ராஜூ, திப்பன்னப்பா கமாக்னூர் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

karnataka
karnataka
author img

By

Published : Jun 19, 2023, 10:43 PM IST

டெல்லி : கர்நாடகாவில் எம்.எல்.சி எனப்படும் மேலவை உறுப்பினர்களுக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் ஜெகதீஷ் ஷெட்டர், போஸ்ராஜூ, திப்பன்னப்பா கமாக்னூர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகேஎஸ் சிவகுமாரும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்படும், கர்நாடக சட்டசபையின் மேலவை உறுப்பினர்களுக்கான இடைத் தேர்தல் நடைபெறுகிறது. எம்.எல்.சி பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. இதில் அண்மையில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட 3 பேர் எம்.எல்.சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த எம்.எல்.சி பதவிகளுக்கான தேர்தலில் 135 காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவு வாக்களிக்கும் பட்சத்தில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள், எம்.எல்.சியாக பதவி பெறுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் மத்திய ஹூப்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வியை தழுவினார்.

பெரிய வங்கியான லிங்காயத் சமூகத்தை சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியின் இணைந்ததால் பாஜகவின் வாக்கு வங்கி சரிந்ததாக கூறப்பட்டது. தேர்தலில் தோல்வியை தழுவினாலும் ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரஸ் கட்சி மீண்டும் வாய்ப்பு அளிக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், எம்.எல்.சி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அதேநேரம் முதலமைச்சர் சித்தராமைய அமைச்சரவையில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஜெகதீஷ் ஷெட்டரை தொடர்ந்து, போஸ்ராஜூ மற்றும் திப்பன்னப்பா கமாக்னூர் ஆகிய இருவரும் எம்.எல்.சி வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சி அமைந்து உள்ளது.

இதில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது, முக்கியத்துவம் வாய்ந்த ஹூப்ளி பகுதியில் பிரம்மாண்ட கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் மனதில் இடம் பிடித்தவர் போஸ்ராஜூ. ராயச்சூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு போஸ்ராஜூ விரும்பிய நிலையில், கோரிக்கையை கைவிடுமாறு ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் அவரிடம் கேட்டுக் கொண்டார்.

ராகுல் காந்தியின் வார்த்தைக்கு இணங்கி போஸ் ராஜூ பின்வாங்கிய நிலையில், அவர் எம்.எல்.ஏ.வாக இல்லாவிட்டாலும் ராகுல் காந்தியின் பரிந்துரையின் பேரில் முதலமைச்சர் சித்தராமையாவின் அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டார். எனவே, அவருக்கு எம்.எல்.சி. சீட் வழங்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : Indigo : 500 விமானங்கள் ஆர்டர்... இண்டிகோ கொடுத்த ஷாக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.