ஜம்மு-காஷ்மீர் : காஷ்மீர் மாநிலத்தில் வடக்கு மாவட்டமான பாரமுல்லாவில் இன்று தீவிரவாதிகள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலில் காஷ்மீர் காவல்துறையை சேர்ந்த காவலர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ளது கிரிரி பகுதி, இங்குள்ள நசீபாத் கடக்கும் சிக்னலில் இந்த தாக்குதல் நடந்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பயங்கரவாத இயக்கத்திடமிருந்து நிதியுதவி பெற்றதாக புனே இளைஞர் கைது!