ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ரெய்னாவாரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், பாதுகாப்புப் படையினர் சம்பவயிடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகள் சூப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பாதுகாப்புப் படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து துப்பாக்கிகள், வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து அப்பகுதி காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் கூறுகையில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் போலி ஊடக அடையாள அட்டை வைத்திருந்தார்" என்றார்.
இதையும் படிங்க: Watch: அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடிப்பு - புனேயில் பயங்கரம்