ETV Bharat / bharat

ஊக்கமருந்து விவகாரம்: ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு தடை! - Sports news in tamil

இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக 21 மாதங்கள் விளையாட தடை விதித்து சர்வதேச சோதனை முகமை உத்தரவிட்டுள்ளது.

தீபா கர்மாகர்
தீபா கர்மாகர்
author img

By

Published : Feb 4, 2023, 8:45 AM IST

டெல்லி: திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனை, தீபா கர்மாகர். 1964ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்திய ஆண்கள் குழு முதல் முறையாக பங்கேற்றது. அதன்பின் ஏறத்தாழ 52 ஆண்டுகளுக்கு பின் 2016 ரியோ ஒலிம்பிக்கில், தீபா கர்மாகர் பங்கேற்று இந்தியாவின் முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்று சாதனை படைத்தார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் தீபா கர்மாகர், 4-வது இடத்தைப் பிடித்தார். இந்த நிலையில் தீபா கர்மாகர், ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறி, சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட அனுமதிக்காமல் இருந்தார் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டே இருந்தன.

இருப்பினும் இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை. மேலும் இது தொடர்பாக தீபா கர்மாகர் மற்றும் அவரது பயிற்சியாளர் ஆகியோரும் மெளனம் காத்து வந்தனர். இந்த நிலையில் ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “உலக ஊக்க மருந்து எதிர்ப்பு முகமையால் தடை செய்யப்பட்ட பீட்டா - 2 ஊக்க மருந்தை, இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் பயன்படுத்தி உள்ளார். இதனை சர்வதேச ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது. இதன்படி இந்த தவறு உறுதி செய்யப்பட்ட நிலையில், 2021 அக்டோபர் 11 முதல் 21 மாதங்களுக்கு, அதாவது 2023 ஜூலை 10 வரை இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் விளையாட இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனை என்பது சர்வதேச ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பின் ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளின் படி வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: Murali vijay : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முரளி விஜய் ஓய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.