ETV Bharat / bharat

உள்ளீட்டு வரிக்கடன் சலுகை: பிளிப்கார்ட், ஸ்விக்கியில் ஐடி துறையினர் ஆய்வு! - வருமான வரித்துறை சார்பில் கணக்கெடுப்பு

பெங்களூர்: உள்ளீட்டு வரிக்கடன் சலுகை தொடர்பாக பிளிப்கார்ட், ஸ்விக்கி நிறுவனங்களில் வருமானவரித் துறை சார்பில் கணக்கெடுப்பு ஒன்று நடைபெற்றுவருகிறது.

பெங்களூர்
பெங்களூர்
author img

By

Published : Jan 7, 2021, 10:26 PM IST

ஜி.எஸ்.டி. கணக்குத் தாக்கல் செய்வதில் மோசடிகள் நடப்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, டி.ஜி.ஜி.ஐ. எனப்படும் ஜி.எஸ்.டி. உளவுப்பிரிவு அலுவலர்கள், அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

போலியான ரசீதுகளைத் தயாரித்து அரசிடம் உள்ளீட்டு வரிக்கடன் சலுகைகளைப் பெறும் நிறுவனங்கள் ஏராளம் உள்ளதால், அவற்றைத் தீவிரமாக மத்திய அரசு கண்காணிக்கத் தொடங்கியது. இதன்மூலம் லட்சக்கணக்கான பதிவுகளை மத்திய அரசு ரத்துசெய்துள்ளது.

இந்நிலையில், உள்ளீட்டு வரிக்கடன் தொடர்பாக வருமானவரித் துறையினர், இன்ஸ்டாகார்ட் (பிளிப்கார்ட்டின் குழு நிறுவனம்), உணவு ஆர்டர் மற்றும் விநியோக நிறுவனமான ஸ்விக்கி ஆகியவற்றில் ஒரு கணக்கெடுப்பை நடத்திவருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக பிளிப்கார்ட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "எங்கள் நிறுவனத்தில் ஐடி துறை சார்பாக கணக்கெடுப்பு ஒன்று நடைபெறுவது உண்மைதான். இது தொடர்பாக எங்களை அவர்கள் தொடர்புகொண்டார்கள். தேவையான அனைத்து தகவல்களையும் நாங்கள் அவர்களுக்கு வழங்கிவருகிறோம்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.