ETV Bharat / bharat

Chandrayaan-3's Vikram Lander: சாதனை மேல் சாதனை... நிலவில் மீண்டும் தரையிறங்கிய விக்ரம் லேண்டர்.. - ILSA

நிலவின் தென் துருவில் கால் பதித்த முதல் நாடு என இந்திய நாட்டிற்கு பெருமையைக் குவித்த சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் 2வது முறை வெற்றிகரமாக தரையிறங்கி சாதனைப் படைத்துள்ளது.

விக்ரம் லேண்டர் 2வது முறை நிலவில் தரையிறங்கி சாதனை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 7:58 AM IST

ஹைதராபாத்: நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகளும் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவைகள் நிலவின் வெவ்வேறு துருவங்களில் விண்கலத்தை அனுப்பு ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நாடும் கால் பதிக்காத, சவாலாக இருந்த நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய சந்திரயான் - 3 விண்கலம் கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

சந்திரயான் - 3 விண்கலம் 10 கட்டங்களாகப் பயணித்து நிலவைச் சென்றடைந்து, பின் விண்கலத்தின் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. இதனால் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்னும் பெருமை மிகுந்த சரித்திர சாதனையை இந்தியா பெற்றது.

அதன் பின் சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய நிலையில், அதில் இருந்து பிரிந்த ரோவர் தனது ஆய்வுப் பணிகளை தொடங்கியது. ரோவர் பிரக்யான் நடத்திய ஆய்வில் அப்பகுதியில் சல்பர் இருப்பதை இஸ்ரோ உறுதி செய்தது. பிரக்யானில் உள்ள ஆல்பா பார்ட்டிகல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் (APXS) கருவி நிலவில் தெற்கு பகுதியில் சல்பர் மற்றும் வேறு சில தனிமங்கள் இருப்பதை உறுதி செய்தது.

LIBS கருவியானது நிலவில் ஆய்வு செய்து அலுமினியம் (Al), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) மற்றும் டைட்டானியம் (Ti) ஆகிய தனிமங்கள் நிலவின் மேற்பரப்பில் இருப்பதையும் மேலும் மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) இருப்பதை இஸ்ரோ உறுதிப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து (செப்.2) இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில், சந்திராயன்-3 திட்டத்தின் படி பிரக்யான் ரோவர் தனது பணிகளை முடித்துள்ள நிலையில், தற்போது தூங்கும் நிலைக்கு (Sleeping Mode) மாற்றப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 22, 2023 அன்று சூரிய உதயம் ஆன பின்பு பிரக்யான் ரோவர் மீண்டும் வெற்றிகரமாக ஆன் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது நிலவின் தென் துருவத்தில் இருக்கும் விக்ரம் லேண்டர் 2வது முறையாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. நிலவை ஆராயும் பணியில் ஈடுபட்டிருக்கும் ரோவரும், லேண்டரும் தொடர்ந்து நல்ல இயக்க நிலையில் இருப்பதால், இஸ்ரோ விக்ரம் லேண்டரை ‘ஹாப் சோதனைக்கு’ உட்படுத்தியது.

  • Chandrayaan-3 Mission:
    🇮🇳Vikram soft-landed on 🌖, again!

    Vikram Lander exceeded its mission objectives. It successfully underwent a hop experiment.

    On command, it fired the engines, elevated itself by about 40 cm as expected and landed safely at a distance of 30 – 40 cm away.… pic.twitter.com/T63t3MVUvI

    — ISRO (@isro) September 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அந்த சோதனையில் விக்ரம் லேண்டர் இஸ்ரோவின் கமாண்டின் (Command) பேரில் நிலவில் இருந்து குறிப்பிட்ட தொலைவு மேலே சென்று பின் மீண்டும் பொறுமையாக கீழே இறங்கி, 2வது முறை நிலவில் இறங்கிய சாதனையைப் படைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ மற்றும் செய்திப் பதிவை இஸ்ரோ தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், “விக்ரம் லேண்டர் அதன் குறிக்கோளில் நினைத்ததை விட முனைப்புடன் உள்ளது. இது வெற்றிகரமாக ஹாப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் கட்டளையைத் தொடர்ந்து தனது என்ஜினை சூடாக்கிய லேண்டர், எதிர்பார்த்தபடி தன்னை 40 செ.மீ நிலவில் இருந்து உயர்த்தி, 30 - 40 செ.மீ தொலைவில் பாதுகாப்பாக தரையிறக்கியது. அதன் இத்தகைய முயற்சி மனிதனின் எதிர்கால ஆராய்ச்சிக்கு ஒரு உந்துதல்.

லேண்டரின் அனைத்து அமைப்புகளும் நல்ல நிலைபாட்டில் உள்ளது. வரிசைப்படுத்தப்பட்ட ராம்ப், ChaSTE மற்றும் ILSA ஆகியவை மீண்டும் மடித்து சோதனைக்குப் பிறகு வெற்றிகரமாக மீண்டும் பயன்படுத்தப்பட்டன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒர்க் ஓவர்; தூங்கச் சென்ற ரோவர்.. இஸ்ரோ வெளியிட்ட லேட்டஸ் அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.