ETV Bharat / bharat

சென்சார் வேலை செய்யாவிட்டாலும் சந்திரயான்-3 தரையிறங்குவதில் சிக்கல் இல்லை: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் - லேண்டர்

Chandrayaan 3 Vikram lander: நிலவின் தென் துருவத்தைஆய்வு செய்ய சென்றுள்ள சந்திரயான் - 3 விண்கலம், அனைத்து விதமான சென்சார் செயலிழந்தாலும் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம்(ISRO) தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 9, 2023, 7:28 AM IST

டெல்லி: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையம்(ISRO) கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் - 3 விண்கலத்தை விண்ணில் ஏவியது. திட்டமிட்டபடி ஆய்வுப் பணிக்கான அடிப்படை நிலைகளைக் கடந்துள்ள சந்திரயான் - 3 விண்கலம் கடந்த 5-ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்ததோடு, அதனைப் புகைப்படம் எடுத்து அனுப்பியது. அந்த புகைப்படத்தை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

மேலும், சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி பணிகளைச் செய்து வருவதாகவும் வரும் 23-ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கும்(Soft Landing) செய்யவுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இதனிடையே, டெல்லியில் பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத்,"சந்திரயான் - 3 விண்கலம் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. விண்கலமானது 100 கிமீ என்ற தூரத்திலான சுற்றுப்பாதையில் இருந்து நிலவுக்கு அருகில் செல்ல தொடங்கும் போது தான் சுற்றுப்பாதையைத் தீர்மானிக்கும் செயல்முறை நடக்கும்.

இதையும் படிங்க: கேரள சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!

பூமியிலிருந்தபடியே லேண்டரின் நிலையைத் துல்லியமாக மதிப்பிடுவதில் மட்டுமே சிக்கல்கள் உள்ளன. திட்டமிட்டபடியே சுற்றுப்பாதை மாற்றங்கள் (Orbit changes) நடக்கின்றன. அதில் எவ்வித விலகல் (Deviation) இல்லை. இதுவரை அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கிறது.

சந்திரயான் - 2 திட்டத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தை வைத்து வலுவான விண்கலம் அமைத்துள்ளோம். இதில் உள்ள அனைத்து சென்சாரும் செயலிழந்தாலும் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று கூறினார்.

முன்னதாக சந்திரயான் -3 விண்கலம் தற்போது வரை வரும் 23-ஆம் தேதி தரையிறங்க வாய்ப்புள்ளதாகவும் அதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் முறையாக இஸ்ரோ அறிவிப்பு வெளியிடும் என்றும் அவர் சோம்நாத் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம்...! மவுனம் கலைப்பாரா மோடி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.