ஐதராபாத் : தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்ற நிலையில், அதில் 1க்கு 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து இஷான் கிஷன் திடீரென விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்தியா திரும்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இஷான் கிஷனுக்கு பதிலாக ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்த கே.எஸ். பரத் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் இடம் பெற்று உள்ள நிலையில், அவர் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ளலாம் என்றும் கே.எஸ் பரத் பகுதி நேர வேகப்பந்து வீச்சாளராக செயல்படக் கூடும் என கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் உத்தேச அணி :
இந்தியா : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா மற்றும் KS பாரத் (விக்கெட் கீப்பர்).
இதையும் படிங்க : Ind Vs SA: 116 ரன்களுக்குள் சுருண்டது தென் ஆப்பிரிக்கா! அர்ஷ்தீப், அவெஷ் கான் அசத்தல்!