பஞ்சாப் மாநிலத்தில் அறுவடைத் திருவிழாவான லோஹ்ரி (Lohri) விழா பிரமாண்டமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த லோஹ்ரியைச் சுற்றியுள்ள கதை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த திருவிழா குளிர்கால பயிர்கள் பழுக்க வைப்பதையும், புதிய அறுவடை பருவத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இந்த லோஹ்ரி விழாவானது பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனத்துடன் கூடிய ஒரு சுவையான உணவு, குடும்பம் மற்றும் நண்பர்களைப் பற்றியது.
ஹரியானா மற்றும் பஞ்சாப் மக்களால், குறிப்பாக இந்து மற்றும் சீக்கிய சமூகத்தினரால், லோஹ்ரி என்ற புனிதமான திருவிழா பரவலாகக் கொண்டாடப்படுகிறது. லோஹ்ரி, லோஹாடி மற்றும் லால் லோய் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது மகர சங்கராந்திக்கு முந்தைய நாள் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில், மக்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே அல்லது பொது இடங்களில் விறகு மற்றும் மாட்டு சாணம் புண்ணாக்குகளைப் பயன்படுத்தி தீ மூட்டி கொண்டாடுகின்றனர். பயிர்களை அறுவடை செய்வதோடு, நெருப்புக்கு பயிர்களிலிருந்து தாங்கள் செய்த போகத்தையும் வழங்குகிறார்கள்.
லோஹ்ரி 2023 - தேதி மற்றும் பூஜை நேரங்கள்: இந்த ஆண்டு (2023) லோஹ்ரி கொண்டாடப்படும் துல்லியமான நாள் தெளிவாக இல்லை. இது ஜனவரி 13 அல்லது 14 என்று பலருக்கு குழப்பமாக உள்ளது. லோஹ்ரி கொண்டாட்டம் ஜனவரி 14, 2023 சனிக்கிழமையன்று நடைபெறும் என்று டிரிக் பஞ்சாங்கம் கூறுகிறது. எனவே மகர சங்கராந்தி ஜனவரி 15, 2023 அன்று ஞாயிற்றுக்கிழமை வருகிறது. மேலும், பிரம்ம முகூர்த்தம் காலை 5.27 முதல் 6.21 வரையிலும், லோஹ்ரி சங்கராந்தி திதி இரவு 8.57 மணிக்கும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
லோஹ்ரி வரலாறு: முகலாய பேரரசர் அக்பரின் ஆட்சியின் போது பஞ்சாபில் வாழ்ந்த துல்லா பாட்டியின் புராணக்கதை, லோஹ்ரியுடன் தொடர்புடைய மிகவும் பிரபலமான நாட்டுப்புறக் கதையாகும். அவர் செல்வந்தர்களைக் கொள்ளையடித்து, ஏழைகளுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் கொடுத்து உதவினார்.
அவர் ஒருமுறை ஒரு குழந்தையை கடத்தல்காரர்களிடமிருந்து காப்பாற்றி தனது சொந்த மகளாக வளர்த்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அவளது திருமணத்தன்று பூசாரி இல்லாமல் சடங்குகளை நடத்தியுள்ளார். மக்கள் அவரை நேசித்ததாலும் போற்றியதாலும் ஒவ்வொரு ஆண்டும் லோஹ்ரியில் பாரம்பரிய பாடலான 'சுந்தர் முந்திரியே' என்னும் பாடலைப் பாடி, மக்கள் அப்பாட்டியை நினைவு கூர்கின்றனர்.
லோஹ்ரியின் முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்: லோஹ்ரி கொண்டாட்டத்தின்போது மக்கள் வெல்லம் சாப்பிடுகின்றனர். அதனுடன், முள்ளங்கி, கீரை மற்றும் கடுகு இலைகள் சேர்க்கப்படுகிறது. இது பண்டைய காலங்களில் உட்கொள்ளப்பட்ட ஒரு சுவையான உணவு என கருதப்படுகிறது. இந்த உணவுகளைத் தவிர, எள், அரிசி மற்றும் வெல்லம் ஆகியவற்றால் செய்யப்பட்ட வேர்க்கடலையை சாப்பிடுகின்றனர்.
லோஹ்ரி என்பது கருவுறுதல் மற்றும் வாழ்வின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் ஒரு பண்டிகை. இந்நிகழ்வில் கிராமங்களில், அறுவடை செய்யப்பட்ட வயல்களிலும், பண்ணைகளிலும் நெருப்பு கூட்டி கொண்டாடுகின்றனர். இந்த விழாவில் இன்னும் பல சடங்குகள் இருக்கின்றன. குளிர்காலத்தின் காலை நேரங்களில், நெருப்பு மூட்டுவதற்காக கிளைகளை சேகரிக்க மக்கள் சுற்றித் திரிவார்கள். குழந்தைகளும் திருவிழாவில் ஈடுபடுவார்கள்.
மாலையில், மக்கள் ஒன்று கூடி, பாப்கார்ன், பஃப்டு ரைஸ் மற்றும் ரேவாரி போன்றவற்றை நெருப்பில் வீசுகிறார்கள். கரும்புகளும் நெருப்பில் பிரசாதமாக வீசப்படுகின்றன. இதனால் எரியும் சர்க்கரையின் நறுமணம் எங்கும் பரவுகிறது. அதுமட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் நிலத்தின் வளம் மற்றும் ஏராளமான பயிர்களின் வளத்தை நாடும் வகையில் ‘மரியாதை வந்து வறுமை ஒழியட்டும்’ என்று பிரார்த்தனை செய்கிறார்கள். பின்னர் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியும் நடனமாடியும் கொண்டாடுகிறார்கள்.
புதிய ஆடைகளை அணிந்து கொண்டு, இனிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள். லோஹ்ரி என்பது புதுமணத் தம்பதிகள் மற்றும் புதிதாகப் பிறந்தவர்களுக்கு ஒரு நல்ல பண்டிகையாகும். புதுமணத் தம்பதிகள் நகைகளை அணிந்தாலும், புதிதாகப் பிறந்தவர்கள் சடங்கின் ஒரு பகுதியாக சீப்பை வைத்திருப்பார்கள். இது ஒற்றுமை மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இடையேயான பிணைப்பின் திருவிழாவாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 90's கிட்ஸ் விளையாட்டுகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய கல்லூரி மாணாக்கர்கள்