ETV Bharat / bharat

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இருள்மூடிக் கிடக்கிறதா? - தேர்தல் பரப்புரை

மேற்கு வங்கத்தில் 6,400 வாக்குச் சாவடிகள் பிரச்சினைக்குரியவை என்று தான் அடையாளப் படுத்தியிருப்பதாகவும், அதனால் மத்தியப் படைகளை இறக்கிவிட்டு அந்த மாநிலத்தின் எட்டுக் கட்ட வாக்குப் பதிவைக் கண்காணிப்பதாகவும் தேர்தல் ஆணையம் பெருமிதத்துடன் கூறி இருக்கிறது. எனினும் முன்மாதிரி நடத்தை விதியைப் பாரபட்சமின்றி நடைமுறைப் படுத்துவதில் இருக்கும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இப்போது இருள்மூடிக் கிடக்கிறது.

Election Commission
தேர்தல் ஆணையம்
author img

By

Published : Apr 15, 2021, 10:35 AM IST

தவறான வழிகளில் ஈட்டிய அல்லது சாதித்துக் காட்டிய தேர்தல் வெற்றி என்பது ஒரு வெற்றியே அல்ல என்று தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லிய இந்தியாவின் முதல் பிரதம அமைச்சரான ஜவஹர்லால் நேருவின் கருத்திற்குச் செவிசாய்ப்பவர்கள் இன்று எவருமில்லை. சட்டம் விதித்திருக்கும் விதிகளை, நியதிகளை மீறுவதற்கு அரசியல் கட்சிகளுக்கு இடையே இன்றைய காலத்தில் போட்டா போட்டி நடப்பதால், மாண்புமிகு ஜனநாயகத்தின் வீரியமான விழுமியங்களுக்குப் பலத்த அடி விழுந்து கொண்டே இருக்கிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் ஆகிய இடங்களில் சட்டசபைத் தேர்தல்கள் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியே முடிந்துவிட்ட நிலையில், மேற்கு வங்கத்தில் இன்னும் நான்கு கட்ட வாக்குப்பதிவு இந்த மாதம் 29-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இப்போது அந்த மாநிலம் அரசியல் சூறாவளிச் சுழல் மையத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது.

மேற்கு வங்கத்தில் 6,400 வாக்குச் சாவடிகள் பிரச்சினைக்குரியவை என்று தான் அடையாளப் படுத்தியிருப்பதாகவும், அதனால் மத்தியப் படைகளை இறக்கிவிட்டு அந்த மாநிலத்தின் எட்டுக் கட்ட வாக்குப் பதிவைக் கண்காணிப்பதாகவும் தேர்தல் ஆணையம் பெருமிதத்துடன் கூறி இருக்கிறது. எனினும் முன்மாதிரி நடத்தை விதியைப் பாரபட்சமின்றி நடைமுறைப் படுத்துவதில் இருக்கும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இப்போது இருள்மூடிக் கிடக்கிறது. 2016-ஆம் ஆண்டு நடந்த மேற்கு வங்கச் சட்டசபைத் தேர்தலில் பாஜக வெறும் மூன்று தொகுதிகளையே வென்றிருந்தது. ஆனால் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 18 தொகுதிகளை வென்றதால் அந்தக் கட்சிக்குப் புத்துணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அந்த வெற்றி தந்த வீர நம்பிக்கையால் இப்போது பாஜக, திரிணமூல் காங்கிரஸ் அரசை வேரோடு சாய்க்கும் ஆர்வத்தில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காவிக் கட்சியின் சவாலை ஏற்றுக்கொண்டு அது வகுத்திருக்கும் பத்ம வியூகத்தை உடைத்தெறிய முதல் மந்திரி மமதா பானர்ஜி உறுதியோடு அயராமல் தளராமல் போராடிக் கொண்டிருக்கும்போது அந்தப் போரில் இப்போது பலியாகிக் கிடப்பது முன்மாதிரி தேர்தல் நடத்தை விதிதான்.

தன்னிடம் கறாராக இருக்கும் தேர்தல் ஆணையம் பாஜகவின் தலைமை செய்யும் அட்டூழியங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று மமதா திதி என்ற ஜனங்களால் அழைக்கப்படும் முதல்வர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார். முன்மாதிரி நடத்தை விதியை மோடி நடத்தை விதி என்று வேறு அவர் கிண்டலாக விமர்சித்திருக்கிறார். இந்த நாடகம் முழுவதும் நிகழ்ந்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இழப்பு என்பது ஜனநாயகத்திற்குப் பெரும் ஊறு விளைவிக்கக் கூடியது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களைச் சுற்றி அரசியலமைப்புச் சட்ட ரீதியான ஒரு தர்ம வட்டத்தைப் போட்டுக் கொண்டு அதன் மையத்தில் தாங்கள் நின்றுகொண்டு அதிலிருந்து துளிகூட விலகாமல் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம். எஸ். கில் சொன்ன வார்த்தைகளை இப்போது ஞாபகத்திற்குக் கொண்டு வருவது நல்லது.

சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பு, அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்கள், தேர்தல் ஆணையர்களின் நியமனத்தில் சர்ச்சைகள் உருவாகாமல் தடுப்பதற்கு ஒரு விசேச அமைப்பை உண்டாக்க வேண்டும் என்று முன்மொழிந்திருந்தார். இதுவரை அவரது அறிவுரை செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது துரதிர்ஷ்டம்தான். தேர்தல் ஆணையத்தின் உச்ச அதிகாரப் பதவிக்கு மத்திய அரசின் தயவு தாட்சண்யத்தினால் நியமிக்கப்படும் அதிகாரிகள் எப்படிப்பட்ட கீழான நிலைமைக்கும் இறங்குவார்கள் என்பது நவீன் சாவ்லா விசயத்தில் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. கோபால சுவாமியின் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கண்டுகொள்ளாமல், திரு சாவ்லாவைத் தலைமை தேர்தல் ஆணையராக நியமிப்பது என்று முடிவானது. அவர் அலுவல் இரகசியங்களை வெளியாட்களுக்குக் கொண்டு சென்றார் என்பது அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்று. கடந்த பொதுத்தேர்தலின் போது, தேர்தல் ஆணையர் திரு லாவசா தலைமைத் தேர்தல் ஆணையரின் தீர்மானத்தில் குற்றம் கண்டுபிடித்தார். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் குற்றஞ் சாட்டப்பட்ட பிரதம அமைச்சர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் நிரபராதிகள் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சான்றிதழ் கொடுத்திருந்தார்.

அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளாத மனிதர்கள் அரசியலமைப்புச் சட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தும்போது மட்டுமே சட்ட அமைப்புகளால் பிரமாதமாக, மாசு மறுவின்றிச் செயல்பட முடியும். தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கு பிரதம அமைச்சர், இந்தியாவின் தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவை உருவாக்க வேண்டும் என்று பலமானதோர் கோரிக்கை இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது. பாஜகவின் ஜாம்பவான் எல். கே. அத்வானி கூட அந்த மாதிரியான ஓர் ஏற்பாட்டை வலியுறுத்தி இருக்கிறார். தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கான சிறப்புக் குழுவை உருவாக்குவது சம்பந்தமான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வின் பரிசீலனையில் இருக்கிறது.

தங்களின் உண்மையான ஆணையைப் பிரதிபலிக்கும் பலமானதோர் தேர்தல் அமைப்பு நிஜத்தில் இருக்கிறது என்னும் மக்களின் நம்பிக்கை மீதுதான் ஜனநாயகத்தின் அஸ்திவாரம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. மக்களின் பொதுநம்பிக்கையில் கீறல்கள் விழாமல் இருக்க வேண்டும் என்றால், தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கு ஒரு சிறப்புக் குழுவை உருவாக்கத்தான் வேண்டும். அதனால் தேர்தல் ஆணையத்தை பாராளுமன்றத்திற்குப் பதில் சொல்லும் நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.