ETV Bharat / bharat

IPL Mini Auction 2023 - முழு விவரம் இங்கே...!

author img

By

Published : Dec 23, 2022, 8:29 PM IST

ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக இங்கிலாந்து வீரர் சாம் கரண் அதிக தொகைக்கு ஏலம் போய் உள்ளார். அவரை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது. ஆஸ்திரேலிய வீரர் கேம்ரூம் கிரீனை 17 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்தது.

IPL Mini Auction 2023
IPL Mini Auction 2023

கொச்சி: 16-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே 28ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது.

முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் ஏலத்தில் கலந்து கொண்ட நிலையில், இந்திய வீரர்கள் உள்பட 405 வீரர்கள் இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகினர்.

சாம் கரண் உச்சபட்சம்: 10 அணிகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 87 வீரர்களுக்கான இடங்கள் இருந்த நிலையில், ஏலம் பயங்கர சுவாரஸ்யமாக சென்றது. நடப்பு சீசனுக்கான ஏலத்தில் இங்கிலாந்து வீரர்களுக்கு அதிக மவுசு காணப்பட்டது.

ஐ.பி.எல். வரலாற்றிலேயே இதுவரை இல்லாத நிகழ்வாக நடப்பு சீசனில் அதிக வீரர்கள் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போனார்கள். கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜொலித்த இங்கிலாந்து வீரர் சாம் கரண் இந்த சீசனில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவரை 18 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

சளைக்காத மும்பை, சென்னை: மறுபுறம் ஆஸ்திரேலிய வீரர் கேம்ரூன் கிரீனை 17 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. சாம் கரணை கோட்டைவிட்டாலும் சுதாரித்துக்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றொரு இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸை 16 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு கைப்பற்றியது.

இன்னொரு இங்கிலாந்து வீரர் ஹாரி பிரூக் 13 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் 5 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் விலை போனார்.

வெளிநாட்டு மோகம்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகோலஸ் பூரணை லக்னோ அணி 16 கோடி ரூபாய்க்கு வாங்கியது. கடந்த சீசனில் கோடியில் விலைபோன டெல்லியைச் சேர்ந்த ஜெயதேவ் உனட்கட் இந்த வருடம் ஆரம்பத் தொகையான 50 லட்ச ரூபாய்க்கு லக்னோ அணியில் தஞ்சமடைந்தார்.

வெளிநாட்டு வீரர்களுக்கு மவுசு அதிகமாக காணப்பட்ட நிலையில், இந்திய வீரர்கள் பலர் ஆரம்பத் தொகைக்கும், சில லட்சங்களுக்குமே ஏலம் எடுக்கப்பட்டனர். நியூசிலாந்து கைல் ஜேமீசனை அடிப்படை விலையான 1 கோடி ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

ஆச்சரியம் அளித்த இந்திய வீரர்கள்: ஆப்கன் நட்சத்திர வீரர் முகமது நபி, நியூசிலாந்து வீரர்கள் ஜேம் நீசம், ஆடம் மில்னே, இந்திய வீரர்கள் முருகன் அஸ்வின், ஸ்ரேயாஸ் கோபால் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை விலைக்கு வாங்க யாரும் முன்வராததால் அவர் அன்சோல்ட் ஆகினார்.

அதேநேரம் எதிர்பாராத வகையில் அடிப்படைத் தொகையாக 20 மற்றும் 40 லட்சத்துடன் களமிறங்கிய இந்திய வீரர்கள் முகேஷ் குமார் 5 கோடியே 50 லட்சத்திற்கும், சிவம் மாவி 6 கோடி ரூபாய்க்கும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளால் விலைக்கு வாங்கப்பட்டு அதிக கவனம் ஈர்த்தனர்.

சென்னையில் ரஹானே: பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வீரர்களை கோடிக்கணக்கில் செலவு செய்து சென்னை அணி விலைக்கு வாங்கினாலும், நிஷாந்த் சிந்து உள்ளிட்ட வீரர்களை அடிப்படைத் தொகைக்கு விலைக்கு வாங்கி அணிக்கு பலம் சேர்த்தது.

ஒருபுறம் இங்கிலாந்து வீரர்களுக்கு மவுசு அதிகம் காணப்பட்டாலும் மற்றொரு புறம் அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் ஜோர்டனை எந்த அணிகளும் விலைக்கு வாங்க முன்வரவில்லை. இந்திய வீரர்கள் அஜிங்கிய ரஹானே உள்ளிட்டோரும் விலைக்கு எடுக்கப்பட்டனர்.

தமிழ்நாடு வீரர் ஜெகதீசன் தேர்வு: மயங்க் அகர்வால் 8 கோடி 25 லட்சம் ரூபாய்க்கு ஹைதராபாத் அணிக்கும், அஜிங்கிய ரஹானே 50 லட்ச ரூபாய்க்கு சென்னை அணியும், சிக்கந்தர் ராசா 50 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் அணியும், இஷாந்த் சர்மா 50 லட்ச ரூபாய்க்கு டெல்லி அணியும், தமிழக வீரர் ஜெகதீசன் 90 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா அணியும் விலைக்கு வாங்கின.

விலை போகாத வைரங்கள்: அதேநேரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் பலர் விலை போகாமல் வெளியேறினர். அதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், வங்காளதேச வீரர்கள் ஷகீப் அல் ஹசன், லிட்டன் தாஸ், இலங்கை வீரர் குசல் மெண்டிஸ், இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டான், நியூசிலாந்து வீரர் ஆடம் மில்னே, ஆப்கனின் முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி, இந்திய வீரர்கள் ஸ்ரேயாஸ் கோபால், மந்தீப் சிங், சந்தீப் சர்மா, நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் உள்ளிட்டோர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏலம் போகாமல் வெளியேற்றப்பட்டனர்.

இதையும் படிங்க: IPL 2023 Auction: இன்று நடைபெறுகிறது ஐபிஎல் 2023 மினி ஏலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.