டெல்லி: நாட்டின் 15ஆவது குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூலை 18அன்று நடைபெற்றது. இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்றத்தில் தொடங்கி நேற்று நடைபெற்றது.
நான்கு சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரெளபதி முர்மு 2,824 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 1,877 வாக்குகள் பெற்றுள்ளார். விழுக்காடு அடிப்படையில், திரெளபதி முர்மு 64.03 விழுக்காடு வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 36 விழுக்காடு வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர், குடியரசுத்தலைவர் தேர்தலில் அளித்த வாக்கு செல்லாத வாக்காகப் பதிவாகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. அந்த வாக்கு திமுக கூட்டணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் மூலம் விழுந்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குடியரசுத்தலைவர் தேர்தலில் அதிகப்பட்சமாக 5 செல்லாத வாக்குகள் பஞ்சாப் மற்றும் மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் இருந்து விழுந்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்க உள்ளார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளை பழிவாங்க தீவிரம் காட்டுகிறது பாஜக - நாராயணசாமி கண்டனம்!